ரமழான் மாதத்தில் கடைசி பத்து நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மற்ற நாட்களில் செய்யும் வணக்க வழிபாடுகளை விட கூடுதல் ஆர்வத்துடன் இந்நாட்களில் வணக்க வழிபாடுகள் செய்யவும், அதற்கு நிறைவான நற்கூலி உள்ளதாகவும் இஸ்லாம் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ரமழான் கடைசி பத்து நாட்களில் ஏதேனும் ஒரு ஒற்றைப்படை நாளில் லைலத்துல் கத்ர் எனும் சிறப்பு தினம் மறைந்துள்ளதாகவும், அந்நாளில் செய்யப்படும் நற்செயல்களுக்கு - ஆயிரம் மாதங்கள் அந்த செயலைச் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அது கிடைக்கும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, ரமழான் கடைசி பத்து நாட்களில் முஸ்லிம்கள் அதிகமதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினத்தில் ரமழான் கடைசி பத்து நாட்களில் பல பள்ளிவாசல்களிலும், தைக்காக்களிலும் சிறப்பு வணக்க வழிபாடுகள் கூட்டாகச் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
லைலத்துல் கத்ர் தினத்தின் பலன்கள் விடுபட்டு விடாமல் இருக்கும் பொருட்டு, கடைசி பத்து நாட்களில், கூடுதல் நன்மைகள் செய்ய ஆசைப்படுவோர், பள்ளிவாசல்களின் உட்பகுதியில் ஒரு மூலையில் கூடாரம் அமைத்து, வீண் பேச்சுக்கள் - செயல்களில் ஈடுபடாமல் வணக்க வழிபாடுகளில் மட்டுமே ஈடுபடுவர்.
அதுபோன்ற கூடாரம் காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டு, ஆர்வப்பட்ட பொதுமக்களால் வணக்க வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில்...
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில்...
மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில்...
அதுபோல, இந்த கடைசி பத்து நாட்களில் நள்ளிரவு நேரங்களில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித், மஸ்ஜிதுத் தவ்ஹீத், அப்பா பள்ளி ஆகிய பள்ளிவாசல்களிலும், பெண்கள் தைக்காக்கள் ஒருசிலவற்றிலும் கியாமுல் லைல் எனும் சிறப்புத் தொழுகையும் நடைபெறுகிறது.
நீண்ட நேரம் நின்று வணங்கும் முறையில் அமைந்துள்ள இத்தொழுகையில், திருமறை குர்ஆனிலிருந்து நீண்ட அளவில் வசனங்கள் ஓதப்படும். மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இந்த கடைசி பத்து நாட்களில் நடைபெறும் கியாமுல் லைல் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில்...
இங்கு நடைபெறும் தொழுகையில் சுமார் 70 முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
மஸ்ஜிதுத் தவ்ஹீதில்...
இங்கு நடைபெறும் தொழுகையில் சுமார் 20 முதல் 40 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
அப்பா பள்ளியில்...
இங்கு நடைபெறும் தொழுகையில் சுமார் 10 முதல் 20 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நடைபெறும் தொழுகையில் சுமார் 150 முதல் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
படங்களில் உதவி:
Y.M.முஹம்மத் தம்பி
A.K.M.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |