Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:06:03 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8964
#KOTW8964
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012
நோன்புப் பெருநாள் 1433: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! பெருந்திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3632 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் – இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாளை முன்னிட்டு, காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தினார்.







அதனைத் தொடர்ந்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.



இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, வழக்குரைஞர் எம்.ஐ.மீரா ஸாஹிப், எஸ்.இப்னு சஊத், பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், ஹாஜி எஸ்.ஓ.கியாத், தமுமுக நகரத் தலைவர் ஜாஹிர் ஹுஸைன், செயலாளர் ஃபிர்தவ்ஸ், மருத்துவ அணி செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48), பொறியாளர் எம்.ஐ.அப்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., கரூர் ட்ரேடர்ஸ் ஹஸன், ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 62,500 தொகையும்,
பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 58,550 தொகையும் என
மொத்தம் ரூபாய் 1,21,050 தொகை பொதுமக்கள் நன்கொடையாகப் பெறப்பட்டது.

படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டுடியோ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [19 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21332

அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அதெப்படி முடியும்...???
posted by Shireen (Kayalpatnam) [19 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21333

(K .D .N . Mohamed லெப்பை) எங்க வாப்பா சவுதி அல்-கோபார் இல் அல்லவா உள்ளார்கள்? அங்கே போட்டோ எடுத்து அனுப்பி இருந்தால் நியாயம் உள்ளது. அவங்க எப்படி காயல்பட்டினத்தில் உள்ள தொழுகையை போட்டோ எடுத்து அனுப்பினார்கள்....????

Shireen
Kayalpatnam

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஈத் முபாரக்
posted by saburudeen (dubai) [19 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21334

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] " இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்" இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லாஹ் ஏற்று பரிபூரண நன்மைகள் கிடைத்தவர்களில் ஒருவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கி அருள் புரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [19 August 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 21335

யாவருக்கும்.... என் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Ibrahim (Jeddah) [19 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21341

mash allah nice to see all, Eid mubarak to all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஆலிம் அவர்கள் உரை
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21343

ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

தங்களின் உரை தொழுகை, மனித நேயம், சிறந்த பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்திருப்பதை இணைய தளத்தில் செவியுற்றேன்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பர்மாவிலே இஸ்லாமிய உயிர்கள் தீக்கிரயாக்க படுவதை நீங்கள் சொன்னபோது அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. அஸ்ஸாம் நமது நாட்டில் உள்ள ஒரு மாநிலம். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பெருமைப்பட்டு பட்டொளி வீசி பறக்கும் பாரத மணிக்கொடியை பறக்கவிட்டு நான்கு நாட்கள்தான் ஆகிறது. இந்த நாட்டின் துணை ஜனாதிபதியாக ஒரு முஸ்லிம் இருக்கிறார் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கும்போது நாட்டின் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார். ஜனாதிபதி துணை ஜனாதிபதிதான் என்ன செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு ஜனநாயாக நாட்டில் நடக்கும் படுகொலையை பற்றி எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்கவில்லை எங்கோ ஒரு நாட்டில் தமிழர்கள் உரிமைக்காக இங்கே மாநாடு நடத்துகிறார்கள்.

தங்களின் பெருநாள் உரையையும் உங்கள் ஆதங்கத்தையும் ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து அதை உடனே சம்பந்தப்பட்ட பிரதமர் அலுவகலதுக்கு அனுப்பி, பெருநாள் தீர்மானமாக,காயல்பட்டின மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக கண்டன அறிக்கையாக அனுப்பி வைக்கும்படி இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை வேண்டிக்கொள்கிறேன்.

ஆலிம் அவர்கள் தனது உரையை கண கச்சிதமாக ஆற்றியதற்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வயது ஏற ஏற பக்குவங்கள் வருகின்றதை பார்க்க முடிகிறது . பொறுமை, கண்ணியம் அதில் கலந்து ஆலிம் அவர்களின் உரைக்கு மெருகேற்றுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

காய்தல் உவத்தல் இன்றி அமைந்துள்ள உங்களின் கண்ணியமான பெருநாள் உரை எல்லோரும் கேட்டு பயன்பெற தக்கது. தொடரட்டும் உங்கள் பணி, பாணி. ஈத் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Haddadh (Thrissur) [20 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21358

Thakkabbalallahu Minna O Minkkum
ஹத்தாத் - திருச்சூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved