தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று 20-08-12 காலை 7.30 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகை முடிந்தவுடன் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் காயல்பட்டினம் மஸ்ஜித் தவ்ஹித் கத்தீப் அப்துல்மஜீத் உமரி அவர்கள் குத்பா பிரசங்கம் செய்தார் இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
பைதுல் மால் - ஏழை எளியவர்களுக்கான நிதி ரூ.57,409 ஆண் பெண் என இரு சாராரிடமும் வசூலிக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் முக்கிய கடமையான பித்ர் ஜக்காத்திர்க்கு காயல்பட்டினம் கிளை சார்பாக 57,950 மாநில தலைமை மூலமாக 10000 ஆக மொத்தம் 67950 ருபாய்க்கு சுமார் 200 மதிப்புள்ள உணவு பொருட்களை கடமையான அந்த மக்களுக்கு காயல்பட்டினம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லா.
நிகழ்ச்சி முடிந்தப்பின் காயல்பட்டினம் ஐ டிவி இல் ஒளிபரப்பபட்டது. இணையதளத்திலும் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது
(www.kayaltntjonline.com).
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தேக் முஜீப் |