காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாச அணையில் நீர்மட்டம் - தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் - மிகவும் குறைவாக இருந்தது.
பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம். கடந்த சில நாட்களாக - இவ்வணையில் நீர்மட்டம் - 35 அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது பாபநாச அணையில் நீர்வரத்து உயர்ந்திருப்பதால், அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி - அணையில் நீர் உயரம், 41.05 அடியினை எட்டி உள்ளது. இதே தேதியில் - கடந்த ஆண்டு, 40.95 அடிக்கு நீர் இருந்தது.
பாபநாசம் அணையில் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தாலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்படாமல் இருந்தது. 205 Cusecs அளவில் வெளியேற்றப்பட்டு வந்த நீர் - இன்று, 289 cusecs அளவில் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர் வரத்து 458 Cusecs அளவில் இருந்தது.
திறந்து விடப்படும் அனைத்து நீரும் குடிநீர் தேக்கங்களுக்கு அனுப்பப்படவில்லை என தெரிகிறது. அவை விவசாய பயனுக்காகவும் அனுப்பப்படுகிறது. மேலும் - தற்போது காயல்பட்டினம் எதிர்க்கொண்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு, தூத்துக்குடி போன்ற பெரு நகரங்களிலும் நிலவுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியும் பாபநாசம் அணையில் இருந்து தான் குடிநீர் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|