வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வசதி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. வெளிநாடுகளில் குடியுரிமை பெறாத இந்தியர்கள் இந்த சலுகை மூலம் - ஏற்கனவே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்காமல் இருந்தால் - இணைத்துக்கொள்ளலாம்.
இதற்கான பிரத்தியேக விண்ணப்பத்தை நிரப்பி, பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்களில் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்புதல் பெற்று, இந்தியாவில் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். ஒரு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலராக - பொதுவாக அந்த தொகுதி அமைந்துள்ள தாலுகாவின் RDO அல்லது சப்-கலெக்டர் இருப்பார்.
இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். இது குறித்த சந்தேகங்களுக்கான பதிலை காண இங்கு அழுத்தவும்.
இந்த வசதி மூலம் இதுவரை 10,029 இந்தியர் வாக்காளர் அட்டை பெற்றிருப்பதாக, பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர்கள் அட்டை எண்ணிக்கை:
கோவா - 18
சிக்கிம் - 1
குஜராத் - 1
தமிழ்நாடு - 42
ஹரியானா - 3
உத்தர்கந்த் - 7
ஹிமாச்சல் பிரதேஷ் - 2
உத்தர் பிரதேஷ் - 1
கேரளா - 9838
மேற்கு வங்காளம் - 3
மத்திய பிரதேஷ் - 1
டாமன் மற்றும் டியு - 3
மகாராஷ்டிரா - 3
டெல்லி - 2
பஞ்சாப் - 70
புதுச்சேரி - 42
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் அட்டை பெற்றாலும், தேர்தல் நேரத்தில் தத்தம் தொகுதிகளில் நேரடியாக வந்துதான் வாக்குகளை செலுத்தவேண்டும். |