ஹாங்காங் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இன்பச் சுற்றுலாத்தலம் துங்சுங். இங்கு நாற்றிசைகளிலும் பச்சைப் பசேலென படர்ந்து விரிந்து வளர்ந்த மரங்களைக் காண முடியும். மக்கள் திரள், வாகனங்களின் இரைச்சல் என எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும் ஹாங்காங் நாட்டின் எந்த அடையாளத்தையும் காண முடியாத அளவுக்கு இங்கே மனதுக்கு இதமூட்டும் அமைதியை அனுதினமும் அனுபவித்து ரசிக்கலாம்.
சிறிதும் குப்பைகள் இல்லாத - சுத்தமான நீரைக் கொண்ட ஒரு ஓடையும் இங்கு உண்டு. அந்த ஓடையில் குளித்துவிட்டு எழுந்தாலே உற்சாகம் பொங்கும். என்றாலும், இங்குள்ள காயலர்கள் கூட அவ்வப்போதுதான் இந்த ஓடையில் குளித்து அனுபவிப்பர். ஆனால் இதில் ருசி கண்ட சீனர்கள் அனுதினமும் இதனை அனுபவிக்கத் தவறுவதில்லை.
ஹாங்காங் - துங்சுங் நகரில் சுமார் 10 காயலர்கள் தம் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அங்கு பாகிஸ்தான் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் சிறிய பள்ளியொன்றும் உள்ளது. இப்பள்ளியில் தொழுவதற்காக காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் சென்றுவிட்டால், அவர்களையே பெரும்பாலும் இமாமத் செய்ய - தொழுகையை வழிநடத்த அங்குள்ளவர்கள் பணிப்பதும் வழமையான காட்சிகளில் ஒன்று.
ஹாங்காங் நாட்டில் 19.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாள் தொழுகையை இப்பள்ளியில் நிறைவேற்றிய பின்னர் காயலர்கள் ஒன்றுகூடிய காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.Y.செய்யித் இஸ்மாஈல்,
துங்சுங், ஹாங்காங் |