ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலத்தின் சார்பில் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலத்தின் சார்பில் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சிக்கு 8.8.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமரசத்தின் துணை ஆசிரியர் சுல்தான் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நான்காண்டு செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துறை செயலாளர் வரவேற்புரையாற்றினார். நீண்ட முயற்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சி இறைவனின் கிருபையால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொள்ள வேண்டும், மேலும் இது போன்று தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்ற இலக்கோடு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சார்பில் வரவேற்று பேசினார்.
அதன் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்மாநில தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். இன்றைய காலத்தில் ஊடகங்கள் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக மாற்றுகின்றனர். பெரிய விஷயத்தை மூடி மறைக்கின்றனர். இதில் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்னைகளிலிருந்து வெளிவர நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்க இறைவனிடம் உதவியை நாடுகின்றேன் என்று தனது தலைமையுரையில் பேசினார்.
கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் பத்திரிகையாளர்கள் தலைமையுரைக்கு பிறகு பத்திரிகையாளர்கள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அதன்பிறகு தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
நோன்பு துறப்பிற்கு பிறகு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இன்றைய சூழலில் முஸ்லிம் பத்திரிகையாளர்களின் பொறுப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் தனது உரையில் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு நிறைய பொறுப்புக்கள் இருக்கின்றன. பொதுவான பிரச்னைகள், மக்கள் சார்ந்த பிரச்னைகளில் நமது கருத்தை பதிவு செய்ய வேண்டும். ஒன்று சேர்ந்து அழகான முறையில் செய்தியை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நமக்கென்று ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி கேரளாவில் நடைபெற்று வரும் மாத்யமம் பத்திரிகையின் வளர்ச்சியை எடுத்து வைத்தார். அது போன்று நடுநிலையான பத்திரிகையை ஆரம்பிப்பதை இலக்காக வைக்க வேண்டும் என்றார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில பொதுச்செயலாளர் தனது நிறைவுரையில் பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் அதிகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அன்றைய காலத்தில் செய்தி சமர்பிப்பதில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தார்கள். அது போன்று நாமும் சீராக, ஒழுக்கவிழுமங்களை பேணி ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் அதற்கு இறைவன் துணை புரிவானாக என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக மாநில ஊடகத்துறை செயலாளர் நன்றியுரையாற்றினார். அதில் தொடர்ந்து இது போன்ற அமர்வுகள் நடத்தப்படும். பங்கேற்பாளர்களிடமிருந்து முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை அதிகமாக வந்துள்ளது. இறைஉதவியோடு அதற்கான தொடர் முயற்சி செய்யப்படும் என்றார். இந்நிகழ்வினை முஹம்மத் அமீன் தொகுத்து வழங்கினார். 75 பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
1. Re:... posted bySEYED ALI (ABUDHABI)[09 August 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21146
டாக்டர் ஹபீப் அவர்கள் எது செய்தாலும் சொன்னாலும்,மேடை ஏறி பேசினாலும் சுத்தமும் அழகும் நேர்த்தியும் இருக்கும்.இந்த நிகழ்ச்சியும் சமுதாயத்தின் இந்த காலகட்டங்களில் அவசியமானதாகவும் இருக்கிறது.இதுபோன்று முஸ்லிம் பத்திரிக்கையாளர்களின் ஒன்று கூடல் எதிர்காலங்களிலும் தொடர வேண்டும்.
மாத்யமம் பத்திரிக்கையை (வளைகுடா பதிப்பு,ஆசிரியர் ஜனாப் ஹம்சா என்பவர்) 2003 லிருந்து 2007 வரை நான்கு வருடம் நான் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மன்னிக்கவும்.அதில் சமுதாய சிந்தனையை விட,தன் இனத்தவர் சிந்தனையும்,மற்றவர்களின் மீது குறிப்பாக தமிழர்களின் மீது காழ்புணர்ச்சியும் தான் மிகுந்திரு இருந்தது.சமுதாய சிந்தனையை அதில் நான் எங்குமே காண வில்லை.
முல்லை பெரியார் ஆணை பிரச்சினையில்,கேரளாவின் அராஜகம் அப்பட்டமானது என்பதற்கு ஆண்டவனே,சாட்சி.ஒவ்வொருத்தரின் மனசாட்சியும் அறியும்.இந்த அராஜகத்திற்கு,அங்குள்ளவர்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பேதமில்லாமல் கைகொர்த்துக்கொண்டனர். இந்தப்பத்திரிக்கையும் தன் தலையங்கம் உட்பட செய்தி வெளியிடுவதிலும் தானும் அப்படியே என்று தன்னை இனம் காட்டிக்கொண்டது.
சமுதாயத்தினர் அனைவரும் மொழி இனம் பாராமல் ஒன்றுபடவேண்டும்,என்ற ஆவலில்தான் நான் இதை எழுதுகிறேன்.மற்றபடி தனிப்பட்டமுறையில் யார் மீதும் எனக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை.
2. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே! posted bykavimagan (kayalpatnam)[09 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21151
மிகவும் அபூர்வமான ஆனால் அத்தியாவசியமான ஓர்
ஒன்றுகூடல் இது. முஸ்லிம் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து இஃப்தார் நிகழ்ச்சியை, நமது சமூக
முன்னேற்றத்திற்கான கருத்துக் களமாக அமைத்திருப்பது
நிறைவைத் தருகிறது.
ஊடகங்களும்,ஊடகவியலாளர்களும்
தனிப்பட்ட காரணங்களுக்காக மோதிக்கொள்ளும் மோசமான
முன்னுதாரணங்கள் தகர்க்கப்படவேண்டும். நண்பர் செய்யத் அலி
அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல பிராந்திய எல்லையைக்
கடந்து,இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட முஸ்லிம் பத்திரிகையாளர்கள் தங்களது பங்களிப்பைத் தந்தாக வேண்டும்.
சமூக சிந்தனையுள்ள முஸ்லிம் பத்திரிகையாளனின் ஒவ்வொரு நிகழ்கால அசைவும், இந்திய முஸ்லிம்களின்
வளமான வருங்காலத்தை உறுதி செய்ய,இந்த ரமழானில்
வல்லவனைப் பிரார்த்திப்போம்.
3. Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[11 August 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 21184
சகோதரர் செய்யத் அலி அவர்கள் சொல்லும் வாதம் எனக்கு புதுமையாக இருக்கிறது. எனினும் அவர் பொய் சொல்லியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். இனி வர இருக்கிற "சமரசம் "இதழில் நான் "மாத்யமம் "இதழை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அது வெளிவர இருக்கிற சூழலில் நண்பரின் தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
பொதுவாகவே மலையாளிகளிடம் தமிழர் குறித்த ஒரு இளக்கபார்வை எப்போதுமே உண்டு. இதை நான் சவூதியில் பணிபுரிந்த காலத்து ( 1997 2002 ) அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன்.
எனினும் "மாத்யமம் "போன்ற இதழ்கள் கூட இப்படி எழுதுகின்றன எனபது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
"முல்லைப்பெரியாறு "அணை விவகாரத்தில் அவர்கள் மாநிலம் சார்ந்து எழுதுகிறார்கள் என எடுத்துகொள்ள வேண்டியதுதான். தமிழகத்துக்கு ஆதரவாக அவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. என்றாலும் பால் சக்கரியா போன்ற மலையாள எழுத்தாளர்கள் கூட மிக தைரியாமாக தமிழகத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறார்கள். மாத்யமமா..?இப்படியா.. ?என்றே வருந்த வேண்டி இருக்கிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross