ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலுக்கு தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் - ஆண்டொன்றுக்கு ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் வருவாய் காண்பிக்கும் வக்ஃப்களின் முத்தவல்லிகள் வாக்களிக்கலாம். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
29.08.2012 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் (முத்தவல்லி) தேர்தலுக்கு தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் இணைப்பு-II-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர்களிடம் (Zonal Superintendent of Wakfs) சான்று பெற்று 14.08.2012 மாலை 5.00 மணி வரை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு (Returning Officer) அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செடீநுய விரும்புகின்ற வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் நேரடியாக தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.08.2012 காலை 10.00 மணி வரை மட்டும் பெறப்படும்.
தபால் ஓட்டு பெற விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் அதற்கான மாதிரி படிவத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்தோ அல்லது மண்டல வக்ஃப்
கண்காணிப்பாளர்களிடமிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
தங்க கலியபெருமாள்,இ.ஆ.ப.,
தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர்,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
சென்னை - 9.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |