காயல்பட்டினம் நகர செய்திகளை தாங்கி வரவுள்ள மாதமிருமுறை பத்திரிக்கை நிகழ்காலம் - ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியன்றும், 16 ஆம் தேதியன்றும் வெளிவரவுள்ள இந்த பத்திரிக்கை - அரசு பதிவு செய்யப்பட்டுள்ளது (T.C.NO. TNTAM 20414; R.DIS. NO.229/2012).
துவக்கமாக 8 பக்கங்களில் வெளிவரவுள்ள இந்த பத்திரிக்கையின் தனி பிரதி விலை ரூபாய் 8 என்றும், உள்ளூர் ஆண்டு சந்தா (நேரடி விநியோகம்) ரூபாய் 200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தா கட்ட விரும்புவோர் காயல்பட்டினத்தில் - கீழ்க்காணும் முகவர்களை அணுகலாம்.
(1) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி,
மெயின் ரோடு,
காயல்பட்டினம்.
2. Media Ethics posted byAbdul Wahid .S (Kayalpatnam)[05 August 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 21074
வாழ்த்துக்கள்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரங்கெட்ட கருத்துகள் நுழையாதவாறு பார்த்துக்கொள்வதோடு பத்திரிக்கை தருமத்தை காப்பாற்றுவது பத்திரிக்கை நடத்துபவர்களின் கடமை என்பதை நிலை நிறுத்தவும்.
6. உண்மையை தோலுரித்து காட்டும்... ஒரு உன்னதமான பத்திரிக்கையாக நகரில் வளம் வர மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[06 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21079
நகர நடப்பு செய்திகளை நகர மக்களுக்கு வழங்க வரும் நிகழ்காலம் மாதமிருமுறை பத்திரிக்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...
இப்படி ஒரு பத்திரிக்கை நமது நகருக்கு மிக அவசியமான ஓன்று... நகரின் நடப்புகள் இணையதளம் மூலமே அறிந்தகொள்ள முடிந்தது...! நகர நடப்பு செய்திகளை பல பாமர மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது இப்போது பாமர மக்கள் உட்பட அனைவர்களும் நகர செய்திகளை அறியும் விதமாக இப்படி ஒரு பத்திரிக்கை (நிகழ்காலம்) நமது நகருக்கு அறிமுகம் ஆவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
உண்மையை தோலுரித்து காட்டும்... ஒரு உன்னதமான பத்திரிக்கையாக நகரில் வளம் வர மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்...
நல்ல சிந்தனை, கட்டுரைகள், நகர நடப்பு செய்திகளோடு நகர மக்களின் கைகளில் தவழ வரும் நிகழ்காலம் மாதமிருமுறை பத்திரிக்கை நகரின் சிறந்த பத்திரிக்கையாக பெயர்பெற்று நகரில் வளம் வர வாழ்த்துகிறேன்...
என்றும் உங்கள் சகோதரன்...
M.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு
8. வாழ்த்துக்கள் posted byAbdulcader (Saudi Arabia)[06 August 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21081
தம்பி ஸாலிஹ் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த பத்திரிக்கை நடுநிலைமயுடனும் தரமான கருத்துக்களுடனும் வெளிவந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகிறேன்.
கனிவான வேண்டுகோள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தம்பி வெளி நாடுகளில் வசிக்கும் எங்களை போன்றவர்களுக்கு தங்கள் பத்திரிக்கை வாசிக்கும் வகையில் இணையத்தளத்தில் வெளியிட்டால் மிகவும் நல்லதாக அமையும். தாங்கள் இந்த விடயத்தில் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்.
9. Re:... posted byMuhammad Abubacker (Chennai)[06 August 2012] IP: 125.*.*.* India | Comment Reference Number: 21083
Already we are spending enough time on www.kayalpatnam.com & other websites. So in my opinion this fortnight magazine is not required. It just kill our time only.
10. நிகழ்காலம் - காயலின் வளமான வருங்காலத்தை எழுதட்டும்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[06 August 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21088
நிகழ்காலம் - காயலின் வளமான வருங்காலத்தை எழுதட்டும்!! இங்கே சகோதரர்கள் ஆதங்கபட்டு குறிப்பிட்டதுள்ளது போல, சமீப காலத்தில் உருவான ஊடக 'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் காயலின் கண்ணியமும் சகோதரத்துவமும் கடைவிரித்து கேள்விக் குறியாக்கபட்டு விடாமல், உங்களின் (ஊடகங்களுக்கே உரித்தான) வழமையான வரைமுறை விதிகளில் வாசகர்களின் சமூக ஆர்வலர்களின் ஆரோக்கியமான மற்றும் வளமான நல்ல பல கருத்துக்கள் சிந்தனைகள் அனுபவங்கள் மனதிற்க்கும் அறிவிற்க்கும் இதம் தரும் தென்றலாய் வீசட்டும்.
ஆளும் வர்க்கத்தின் ஜால்ரா கூட்டங்களின் சூழ்ச்சி சுறுக்கு பைக்குள், சில சில்லரைகளுக்கு சுருங்கி விடாமல்... ஒட்டு மொத்த அடிமட்ட காயலின் ஒரே (உன்னத) வாய்சாக வான் ஓங்கி ஒலிக்கட்டும் !!
இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் படிப்பவர்கள் மட்டும் அறிவு மற்றும் சமூக விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால் போதாது... ஊரில் உள்ள அனைத்து தர மக்களின் கரங்களில் இவ்விதழ்கள் தவழ்ந்து, அவர்களின் அறிவு மற்றும் சமூகப்பசிக்கு அருமருந்தாக, அவர்களின் உணர்வு மற்றும் எழத்து/ கலைத்திறனை 'நிகழ்காலம்' வெளிக்கொணரட்டும்.
'நிகழ்காலம்' தரமான படைப்புகளுடன் இதழாக வெளிவருவது காலத்தின் அவசியமே !!
“நிகழ்காலம்” அருமையான மிகப் பொருத்தமான பெயர்! நிகழ்காலம் இனி வருங்காலங்களில் நிகழ்வுகளின் நிஜமான களமாக தொடர்ந்து வந்து மக்களின் பேராதரவைப் பெற்று மலர வாழ்த்துக்கள்.
-ராபியா மணாளன்.
12. Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[07 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21097
நமது ஊரிலிருந்து இதுவரை மார்க்க சம்பந்தமான இதழ்களே வெளிவந்து கொண்டிருந்தன. முதன் முறையாக சமூக நோக்கை அடிப்படையாக கொண்டு ஒரு இதழ் (நிகழ காலம் )வெளிவர இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சமூக அவலங்களையும்,திரைமறைவில் நடப்பவற்றையும், கலாச்சார சீர்கேடுகளையும் தைரியமாக தோலுரித்து காட்டுவதோடு,பெண்கள்,குழந்தைகள்,பள்ளிமாணவர்கள் முதலியோரின் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
13. Re:... posted bysaburudeen (dubai)[10 August 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21156
மக்களுக்கு எதிரான அவலங்களை தோலுரித்து காட்டி ஆட்சியாளர்களை விழிப்படைய செய்யும் வகையில்.மக்களின் உற்ற நண்பனாய் சேவையாற்ற புதிதாய் பிறக்கும் 'நிகழ்காலம்" பத்திரிக்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
14. Re:... posted bymackie noohuthambi (Kayalpatnam)[11 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21195
OUR TRYST WITH DESTINY என்று பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திரம் கிடைத்த உடன் சொன்ன அதே வசனத்தை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துவது என்பது ஓர் சவால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை உங்கள் சுதந்திர தின இதழில் படித்த பிறகுதான் சொல்ல முடியும்.
எனக்கு வாழ்த்த வயதில்லை என்று சொல்ல வரவில்லை. வாழ்த்த அவகாசம் தேவை அவ்வளவுதான். MY STEPS ARE MEASURED!
15. 'தூய எண்ணத்துடன் செயல் பட அருள் புரிவானாக ! posted byM.S.Kaja Mahlari. (Singapore)[29 August 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21582
" நிகழ்காலம் " மாதமிருமுறை பத்திரிக்கை ஊர் நல செய்திகள், ஊர் நடப்பு, நகர்மன்ற செய்திகள், பொதுவான செய்திகள் இவைகளை உள்ளடங்கியதாக இருத்தல் அவசியம்.
இதில் கொள்கை ,கோட்பாடுகள், இயக்க செய்திகள், கருத்து வேறுபாடு ,முரண்பாடு போன்ற செய்திகள் போன்றவை இல்லாமல் இருப்பது அவசியம்.
மார்க்க சம்பந்தமான அனைவருக்கும் பொதுவான செய்திகள் இருப்பது பிரச்சனை இல்லை.
இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கை நீண்ட ஆயுளுடன் ,நிறைந்த செய்திகளுடன் நீடித்து இருக்கும்.
இல்லாவிட்டால் "பெயருக்கு ஏற்ற பிரகாரம் " பத்திரிக்கையும் "நடப்புக்காலம் ,வருங்காலம் " என்று இல்லாமல் ஆகிவிடும்.
அடுத்து இது ஒரே சார்பான கருத்துக்களை கூறாமல் இருப்பதோடு ,ஊர் நலங்களில் அக்கறையுள்ள அணைத்து சார்பான செய்திகளையும் கூறும் பத்திரிக்கையாக இருக்கவேண்டும்.
குறிப்பாக நகர் நல மன்றம், ஐக்கியப்பேரவை இவைகளுக்கு மத்தியில் இடம்பெறும் நீயா/ நானா ? என்ற போட்டித் தன்மை இல்லாமல் அனைத்தும் காயல்பதியின் ,காயல் மக்களின் நன்மைக்கே ! என்ற ஒரே எண்ணமே நிறைந்து இருக்கவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் "நிகழ் காலத்தின் வருங்காலத்தை ,எதிர் காலத்தை 'தூய எண்ணத்துடன் செயல் பட அருள் புரிவானாக ! ஆமீன் !
16. Re:... posted byNMZ.Ahamedmohideen (TUTICORINDISTRIC )[30 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21604
அஸ்ஸலாமு அலைக்கும். நிகழ்காலம் சிந்தனைக்கு விருந்தாகும் புனித இதழ் . நம்மை அதிகமாக சிந்திக்கவைக்கும் இதழ்களே நமக்கு உதவி புரிபவை . பழைய சட்டையை அணிந்தாவது புதிய இதழை வாங்கிப்படி . என்பது அறிஞர் அண்ணாவின் அமுத மொழி . எனவே அனைவரும் படிப்போம் நிகழ்காலம் . நிகழ்காலமே !அழுக்குகளை களைந்து யறிந்து அனைவர்மனதிலும் நல்லிடம் பிடிக்க நீ நில்லாது சுழல நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . வையத்துல் நீ வாழ்வாங்கு வாழ வல்லோனிடம் துஆ வேண்டும் அன்பின் காயலர் ;;என் . எம் . இசட் . அஹ்மத் முஹியதீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross