காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 03.08.2012 வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையில், பள்ளி வளாகத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, எல்.கே.துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.பீர் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, நடப்பாண்டுடன் பணி நிறைவு செய்யவுள்ள பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ “நோன்பின் மாண்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பில், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலரும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், இரு வகை வடை, கறி கஞ்சி, குளிர்பானம், கேக் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
தகவல்:
S.A.N.அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1432) இப்பள்ளி ஆசிரியர்களின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |