காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவையடுத்து, சதுக்கைத் தெருவின் வட முனையிலேயே அமைந்துள்ளது ஆமினா பள்ளி என்றழைக்கப்படும் அஹ்மத் நெய்னார் பள்ளிவாசல்.
இப்பள்ளியின் முத்தவல்லியாக பல்லாண்டு காலமாக சேவையாற்றிய ஹாஜி பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபீ அவர்கள் மறைவையடுத்து, பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், அவருக்குத் துணையாக ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் சேவைாயற்றி வருகின்றனர்.
ஹாஜி பி.எம்.எஸ்.அபுல் ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ பள்ளியின் இமாமாகவும், ஜெஸ்மின் இஸ்மாஈல் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா (கே.ஏ.டி.) சங்கத்தில், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் ஆயுட்கால தலைவராகவும், ‘வெள்ளை வேட்டி‘ அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரீ, ஹாஜி என்.எஸ்.அப்துஸ்ஸலாம் ஆகியோர் செயலாளர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையை, காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் நவ்ஃபல், குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் தர்வேஷ் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ (வெள்ளை வேட்டி ஆலிம்) பாடத்தைக் கவனிக்கும் ஸாமிஃ - ஆக செயல்பட்டு வருகிறார்.
இப்பள்ளியில், நடப்பாண்டு ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி தினமும் நடத்தப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் கிடையாது. தினமும் கறி கஞ்சி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ரூபாய் 10,000 தொகை உத்தேசமாக செலவழிக்கப்படுகிறது.
இங்கு நடைபெறும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர். நேற்று மாலையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களை, இங்கே சொடுக்கி காணலாம்.
தகவல்:
ஹாஜி ஹபீப் முஹம்மத்.
|