கடந்த 30.07.2012 அன்று அதிகாலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையத்தைத் தாண்டிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணிக்க வணிகர் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் உட்பட ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.இதனையடுத்து, தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, விபத்தில் காலமான காயல்பட்டினம் விளக்கு முஹ்யித்தீன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
01.08.2012 அன்று (நேற்று) இரவு 09.30 மணியளவில் காயல்பட்டினம் வந்த அவர், குத்துக்கல் தெருவிலுள்ள விளக்கு முஹ்யித்தீன் இல்லத்திற்குச் சென்று, அவரது மாமனார் ஹாஜி நெய்னா லெப்பை, சகலை எல்.எம்.இ.கைலானீ உள்ளிட்ட உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், காட்டுத் தைக்கா தெருவிலுள்ள - விளக்கு முஹ்யித்தீனின் காலமான முதல் மனைவி இல்லம் சென்று, அவரது மாமனார் அப்துல அஜீஸ், மைத்துனர்களான வி.எஸ்.எம்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், நெய்னார் தெருவிலுள்ள விளக்கு முஹ்யித்தீனின் பெற்றோர் இல்லத்திற்குச் சென்ற அவர், அங்கு அவரது சகோதரர்களான வி.எஸ்.அல்தாஃப், வி.எஸ்.லத்தீஃப் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இச்சந்திப்புகளின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவரும், நகர திமுக துணைச் செயலாளருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், திமுக இளைஞரணி நகரச் செயலாளர் காதர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
படம்:
வீனஸ் ஸ்டூடியோ
|