திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை அடங்கிய திருநெல்வேலி மண்டல உள்ளாட்சி மன்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று காலை திருநெல்வேலியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு கே.பி. முனுசாமி தலைமை வகித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்னர் - தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள காயல்பட்டினத்திற்கான குடிநீர் திட்டம் குறித்தும், நகராட்சியில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும், தெரு விளக்குகளை பராமரிக்க பணியாட்கள் பொறுப்பு உருவாக்குவது குறித்தும், நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்த சந்திப்பின்போது நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.எம். சம்சுதீன் மற்றும் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வு கூட்டத்திற்கு திருநெல்வேலி வந்துள்ள உள்ளாட்சி துறைக்கான முதன்மை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு சந்திரகாந்த் காம்ப்ளே IAS ஆகியோரிடமும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - அமைச்சரிடம் வழங்கப்பட்ட
கோரிக்கைகள் குறித்து எடுத்து கூறினர். கோரிக்கைகள் குறித்து உரித்த நடவடிக்கைகள் எடுக்க ஆவனம் செய்வதாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். |