காயல்பட்டினம் மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு ஆகிய ஐந்து தெருக்களையும் அரவணைத்தாற்போல் அமைந்துள்ளது மகுதூம் ஜும்ஆ பள்ளிவாசல்.
ஹாஜி வி.எம்.ஏ.நூஹ் ஸாஹிப் இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் துணைத் தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ இப்பள்ளியின் இமாமாகவும், அரபி அமானுல்லாஹ் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் தொழ வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததையடுத்து, அதன் பழைய கட்டிடம் முற்றிலுமாக அகற்றப்பட்டு, விசாலமான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, தரைதளத்தில் தொழுகை துவக்கப்பட்டதுடன், கடந்த 11.11.2011 அன்று, நகரின் மூன்றாவது ஜும்ஆ பள்ளியாக இப்பள்ளி அறிமுகமானது.
இப்பள்ளியின் நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழுவினராக, ஹாஜி ஏ.ஆர்.இக்பால், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.டி.லபீப், எல்.எம்.இ.கைலானீ, இப்றாஹீம் (48), ஹாஜி கிழுறு முஹம்மத் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
கறி கஞ்சிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 15,000 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 12,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும், பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 20,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.
தினமும் மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இந்த ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 150 முதல் 200 குடும்பத்தினர் வரை பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 50 முதல் 75 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
இப்பள்ளியின் நடப்பாண்டு தராவீஹ் (ரமழான் சிறப்புத்) தொழுகையை ஹாஃபிழ் தைக்கா லெப்பை, ஹாஃபிழ் லெப்பைத்தம்பி ஆகியோர் இமாம்களாக வழிநடத்தி வருகின்றனர்.
நேற்று மாலையில் இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |