தமிழ்நாடு வாரியத்திற்கான தேர்தல் குறித்து அரசு செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
1. முத்தவல்லி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க அல்லது சேர்க்காமலிருக்க 3.7.2012 வரை (மாலை 5.30 மணிக்கு முன்பாக) வந்துள்ள கோரிக்கைகளை மற்றும் மறுப்புகள் மீது தேர்தல் அலுவலர் கவனமாக பரிசீலித்து தீர்வுக் கண்டுள்ளார். பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் அதிகாரி மற்றும் அரசுச் செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தமிடிநநாடு வக்ஃப் வாரியம் அலுவலகம், சென்னை-600 001, வக்ஃபுகளின் மண்டல கண்காணிப்பாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் 26.7.2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
2. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் அதிகாரி, தமிடிநநாடு அரசிதழில் தேர்தல் அறிவிக்கை தனியாக வெளியிடுவார்.
தங்க கலியபெருமாள்,
தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர்,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |