“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” அறிவியல் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியருக்கு பரிசுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இம்மாதம் 25ஆம் தேதியன்று, தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற “புதிய தலைமுறை ஆயுதம் செய்வோம் வழங்கும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” அறிவியல் போட்டியில் எம் பள்ளியின் மாணவியர் பங்கேற்றனர். அவர்களுள்,
ஆகிய மாணவியர், School Bag, Lunch Bag, Silver Lunch Box ஆகிய பரிசுப் பொருட்களும், போட்டியில் பங்கேற்றமைக்கான சான்றிதழ்களும் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.
இவ்வாறு, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |