நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, வழமை போல காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிறுவனத்தின் மூலம் இரவு சிறப்புத் தொழுகைக்குப் பின் தினமும் இரவு 10.30 மணிக்கு தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
19.07.2012 வியாழக்கிழமையன்று, “மறுமை வெற்றி யாருக்கு?” என்ற தலைப்பிலும்,
20.07.2012 வெள்ளிக்கிழமையன்று, “அன்றாட வாழ்வில் ஆன்மிக நெறி” என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
21.07.2012 சனிக்கிழமையன்று, “இஸ்லாமிய பார்வையில் புறம் - பொறாமை - அவதூறு” என்ற தலைப்பிலும்,
22.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று, “அல்லாஹ்வின் கருணையும், கோபமும்” என்ற தலைப்பிலும்,
23.07.2012 திங்கட்கிழமையன்று, “இஸ்லாம் வலியுறுத்தும் குடும்ப உறவு” என்ற தலைப்பிலும் மவ்லவீ ரஃபீக் ஃபிர்தவ்ஸீ உரை நிகழ்த்தினார்.
24.07.2012 செவ்வாய்க்கிழமையன்று, “இறை வணக்கமும் - இணை வணக்கமும்” என்ற தலைப்பிலும்,
25.07.2012 புதன்கிழமையன்று (நேற்று), “பித்அத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலும், மவ்லவீ எம்.முஜீபுர்ரஹ்மான் உமரீ உரையாற்றினார்.
தினமும் இரவு 10.30 மணிக்கு உரை துவங்கி, 11.45 மணிக்கு நிறைவுறுகிறது. நிகழ்ச்சிகளனைத்தும், ஐ.ஐ.எம். டிவி-யில் நேரலை செய்யப்படுகிறது. ஐ.ஐ.எம்.-இன் பிரத்தியேக இணையதளத்திலும் தினமும் தொடர்சொற்பொழிவு நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல்:
S.அப்துல் வாஹித் & M.A.அப்துல் ஜப்பார் |