காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவையொட்டிய அக்பர்ஷா தெருவில் அமைந்துள்ளது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல்.
இப்பள்ளியின் இமாமாக சென்னையைச் சேர்ந்த ஹாஃபிழ் ரியாஸ் என்பவரும், பிலாலாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த நஜ்முத்தீன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் நோன்பு துறக்க வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், பள்ளி திறக்கப்பட்டது முதல் பல ஆண்டுகளாக வெளிப்பள்ளிகளிலிருந்தே கஞ்சி எடுத்து வரப்பட்டு இங்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. நாளடைவில், இப்பள்ளிவாசலைப் பயன்படுத்தும் இப்பகுதி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, தற்போது இப்பள்ளியிலேயே நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.
கறி கஞ்சிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 3,500 தொகை செலவழிக்கப்படுகிறது. இப்பள்ளியைச் சுற்றிய 3 தெரு மக்களுக்காக ஊற்றுக்கஞ்சி வினியோகமும் செய்யப்படுகிறது.
இப்பள்ளியில் நடப்பாண்டில் சுமார் 30 பேர் வரை தினமும் நோன்பு துறக்க வருகின்றனர். நேற்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |