காயல்பட்டினம் கோமான் தெருவில் அமைந்துள்ளது மொட்டையார் பள்ளி.
தினமும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு, இரவு தராவீஹ் தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் வழமையாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் தலைவராக எம்.எம்.இஸ்மாஈல், துணைத் தலைவராக என்.எம்.ஃபாரூக், செயலாளராக என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், பொருளாளராக காஸிம் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
பள்ளியின் இமாமாக ஹாஃபிழ் வி.எம்.எஸ்.முஹ்யித்தீன், பிலாலாக அபுல் காஸிம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
ரமழான் காலங்களில் இப்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கும், சுற்றுவட்டார புறநர் பகுதி மக்களுக்கும் நோன்புக் கஞ்சி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில்
வெண்கஞ்சிக்கு ரூபாய் 3,500 தொகையும்,
காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 5,000 தொகையும்,
கறி கஞ்சிக்கு ரூபாய் 8,000 தொகையும்,
பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 12,000 தொகையும் உத்தேசமாக செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
ரமழான் 12, 27 ஆகிய தினங்களில் பள்ளியின் சார்பில் பிரியாணி கஞ்சி தயாரிக்கப்படுவதாகவும், இதர தினங்களில் அனுசரணையாளர்கள் விரும்பின் பிரியாணி கஞ்சி தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் 150 முதல் 200 பேர் வரை பங்கேற்கின்றனர். நேற்றைய இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களை அறிய இங்கே சொடுக்குக!
|