காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் எதிரில் அமைந்துள்ளது இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.)
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் திருக்குர்ஆன் விளக்கவுரை, தினமும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியருக்கு, காலை-மாலையில் திருக்குர்ஆன் ஓத பயிற்சி, டியூஷன் சென்டர், நோன்பு காலங்களில் தினமும் இரவில் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு, ரமழான் முழுக்க தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள், ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையடுத்த 3 தினங்களில் உள்ஹிய்யா - கூட்டு குர்பானி செயல்திட்டம், பைத்துல்மால் என பல்வேறு செயல்திட்டப் பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது இந்நிறுவனம்.
ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் இங்கு நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தினர், பஜார் - கடை வீதிக்குச் செல்லும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு நோன்பு துறப்பது வழமை.
20.07.2012 அன்று (நேற்று) முதல் நோன்பு துவங்கியதாக அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ்வறிவிப்பின் அடிப்படையில் நேற்று நோன்பு நோற்றவர்கள், ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நோன்பு துறந்தனர்.
இங்கு தினமும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் கறிக்கஞ்சி, வடை, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட் அனைவருக்கும் வினியோகிக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு கறிகஞ்சிக்கு சுமார் 7,000 ரூபாயும்,
வடை, பேரீத்தம்பழம், தண்ணீர் வகைக்கு சுமார் 1,500 ரூபாயும்
செலவழிக்கப்படுவதாக அந்நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் 300 முதல் 400 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
|