காயல்பட்டினத்திலுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், ரமழான் மாதத்தை முன்னிட்டு அத்தியாவசிய சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில், காயல்பட்டினத்திலுள்ள 76 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களான என்.ஏ.முஹம்மத் நூஹ், முத்துவாப்பா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோரிணைந்து பொருட்களை ஏழைக்குடும்பத்தினரின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வினியோகித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், இத்திட்டத்தின் கீழ் காயல்பட்டினத்திலுள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்க இணைந்து அனுசரணையளித்த ரிதா ஃபவுண்டேஷன் நிறுவனத்தார் மற்றும் 100 கிலோ பேரீச்சம்பழம் தந்துதவிய சஊதியைச் சார்ந்த ஒருவர் மற்றும் அதனை தமது கேரவன் கார்கோ நிறுவனத்தின் மூலம் அனுப்பித் தந்த இப்றாஹீம், அபூபக்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம். |