காயல்பட்டினத்திலுள்ள உழைக்கவியலாத - ஏழையான - நிராதரவான குடும்பங்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், ரமழான் மாதத்தை முன்னிட்டு அத்தியாவசிய சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அம்மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 2,200 தொகைக்கான பொருட்கள் வீதம் மொத்தம் ரூபாய் 1,21,000 மதிப்பீட்டில் - அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, தானிய வகைகள், பேரீத்தம்பழம், கடற்பாசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய பொதி அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வினியோகிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் நடப்பு வினியோகத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 55 பயனாளிகள் சமையல் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
வினியோக ஏற்பாடுகளை, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் மற்றும் சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து செய்திருந்தனர். |