காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப் படி, மாநிலமெங்கும் பள்ளிக்கூடங்களில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணிக்கு கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலை வகித்தார்.
மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.
பின்னர், பள்ளி தலைமையாசிரியர் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற - திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கதிரேசன் சிறப்புரையாற்றினார்.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா பொன்னாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடப்பு விழாவை முன்னிட்டு முன்னதாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி மற்றுமு் கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
மீராத்தம்பி,
ஆசிரியர், எல்.கே. மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |