பள்ளிக்கூடம் செல்லும் பெண் மாணவியருக்கு மார்க்கக் கல்வியைப் போதிப்பதற்காகவும், சமுதாயப் பணிகள் பல செய்வதற்காகவும் - காயல்பட்டினம் தைக்கா தெருவில் இயங்கி வருகிறது மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம்.
இந்நிறுவனத்திற்கு சொந்த இடம் வாங்குவதற்கு நிதியுதவி கோரி வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
இறை ஏகன் அல்லாஹ்வின் அருள் நாடி...
இறைதூதர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் மற்றும்
அவர்களின் வழிதொடர்ந்த இறைநேசர்களின் நெறிநாடி.
“எவன் ஒருவன் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டிகின்றானோ
அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்”
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.......)
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தைக்கா தெருவில் பெண் குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வி போதிப்பதற்கும், சமுதாயப் பணிகள் செய்வதற்கும் 1988ஆம் ஆண்டு சேவை மனம் கொண்ட நன்மக்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மஜ்லிஸூன் நிஸ்வான் மகளிர் மன்றம்.
கடந்த 25 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் 1000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தீன் கல்வி அளித்துள்ளது. தற்போதும் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 150 மாணவிகளுக்கு மேல் தீன் கல்வி பயின்று வருகின்றாகள்.
ஆனால் இதுவரை மதரஸாவிற்கு என்று சொந்த இடம் எதுவும் இல்லாமல் தனியார் இடத்திலும் பெண்கள் தொழும் தைக்கா போன்ற சிறிய இடங்களிளும் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நடத்தி வருகின்றோம். நாளுக்குநாள் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இனி மதரஸாவை எப்படி நடத்தப்போகிறோம் என தவித்துப் போயிருந்த நேரத்தில்தான் அல்லாஹ்வின் பெருங்கருணையால், தைக்கா தெரு - புதுக்கடைத் தெரு - மொகுதூம் தெரு ஆகிய மூன்று முக்கிய தெருக்களுக்கு நடுவில் மிகப் பாதுகாப்பான இடத்தில் பெண்கள் தைக்காவிற்கு மிக அருகிலேயே 26க்கு 102 அடி அளவுள்ள நிலம் ரூபாய் 26 லட்சத்திற்கு விலைக்கு வருகிறது.
மாணவிகளிடமிருந்து மாதம் ருபாய் 30ஃ- பெறப்படுகின்ற நிலையில் இவ்வளவு பெருந்தொகையை மதரஸா நிர்வாகம் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தும் தங்களைப் போன்ற தாராள மனம் படைத்த தனவந்தர்களின் நல்லாதரவோடும் நிதியினைப் பெற்று இன்ஷா அல்லாஹ் இறைப் பணியாற்ற உள்ளோம்.
இடம் பற்றாக்குறையினால் மார்க்ககல்வி தவிர மற்ற சமூதாய பணிகளை சரிவர செயல்படுத்த முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அதையும் தொடரலாம் என இருக்கின்றோம்.
எனவே தங்களின் தாராள உதவியை மனமுவந்து அளித்து ஈருலக நன்மைகளைப் பெற்றுக்கொள்றுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்களைப் போன்ற தாராளமனம் படைத்த தனவந்தவர்கள் இச்செய்தியைப் பார்வையிடும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், நிறுவனங்கள் போன்றவர்களிடத்திலும் நிதியினை பெற்று கீழ்கண்ட முகவரிக்கு ஏற்பாடு செய்து தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
இந்தப் பணிகள் யாவும் “ஆலிமா டிரஸ்ட்” என்னும் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
வங்கிக் கணக்கு விபரம்:
K.RAHMATHU NISA
ICICI A/c. No: 615301008334
Kayalpatnam Branch.
இப்படிக்கு,
தங்கள் மேலான துஆக்கள் மற்றும்
பொருளாதார ஒத்துழைப்புகளைப் பெரிதும் நாடும்
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தினர்.
(தொடர்புக்கு: +91 95242 40466, +91 99407 69542)
இவ்வாறு, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |