மாற்றுத் திறன் மாணவ, மாணவியர்களுக்கு Magnifier வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு அளிப்பது, அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது, சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் முழு பங்கேற்பினை உறுதி செய்வது மற்றும் அவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பது போன்ற பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் பள்ளிகளில் படிக்கும் பார்வைத் திறன் குறைவுடைய மாற்றுத் திறன் மாணவ, மாணவியர், உரிய பாட நூல்களை படிப்பதற்கு
வசதியாக எழுத்துக்களை பெரிதாக்கி காட்டி சுயமாக படிக்க உதவும் கருவியை (Magnifier) 50 லட்சம் ரூபாய் செலவில் 500 மாணவ,
மாணவியருக்கு வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறன் மாணவ, மாணவியர் பாடநூல்களை பெரிதாக்கி படிக்கக்கூடிய கருவியை (Magnifier) கணினி,
மடிக்கணினி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் பொருத்தி தாங்கள் படிக்கும் எழுத்துக்களை பெரிதாக்கி எளிதாக படிக்க இயலும். இதன் மூலம்
பார்வை குறைவான மாணவ, மாணவியர், அந்தக் குறைத் தெரியாமல், தங்களது பாடநூல்களை நன்கு படித்து அறிவில் மற்றவர்களுக்கு
இணையாக மேலோங்க இயலும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9. |