காயல்பட்டினம் அஞ்சலகம் அருகிலுள்ள பேருந்து பயணியர் தரிப்பிடத்தில் நேற்றிரவு 07.15 மணிக்கு காணக்கிடைத்த காட்சிதான் இது!
பழுதடைந்துள்ள இந்த பேருந்து நிறுத்தத்தை அகற்றிட சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து டெண்டரும் விடப்பட்டது. எனினும், பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்று கருதி யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை.
நகரில் ஒருவழிப்பாதை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை இந்த பயணியர் தரிப்பிடம் அவசியமானதாகவே இருந்து வந்தது. ஆனால், ஒருவழிப்பாதை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மேற்குத் திசையில் பேருந்து செல்லாது என்ற நிலையில், இந்த பயணியர் தரிப்பிடம் முற்றிலும் அவசியமற்றுப் போனது.
பயணியருக்கு இத்தரிப்பிடம் அவசியமற்றுப் போனாலும், இதுபோன்ற “குடி”மக்களுக்கு தற்போதுதான் இதுபோன்ற தரிப்பிடங்கள் அவசியமானதாக மாறி வருகிறது.
படங்கள்:
“நட்புடன்” முத்து இஸ்மாஈல்,
ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ், மெயின் ரோடு, காயல்பட்டினம்.
|