Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:31:07 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8699
#KOTW8699
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 11, 2012
தென்மேற்கு பருவ மழை துவங்க காலதாமதமாவதால் காயல்பட்டினத்திற்கு குறைந்தளவு குடிநீர் விநியோகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2719 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மேல ஆத்தூரில் இருந்து தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தினசரி சுமார் 20 லட்ச லிட்டர் அளவு தண்ணீர் - காயல்பட்டினத்திற்கு வழங்குகிறது. பாபநாசம் அணை - ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வழியாக மேல ஆத்தூருக்கு நீர் வருகிறது.

மே இறுதி - ஜூன் முதல் வாரங்களில் பொதுவாக தென்மேற்கு பருவ மழை தென் தமிழகத்தில் துவங்கும். ஆனால் இவ்வாண்டு - பருவ மழை துவக்கத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அணைகளில் உள்ள தண்ணீர் மிக குறைவாக உள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் - நேற்றைய (ஜூலை 10) அளவுபடி 35.45 அடி அளவுக்கே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே தினத்தில் 42.45 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது.

காயல்பட்டினத்திற்கு தண்ணீர் வழங்கப்படுவது குறித்து - தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் பொறியாளர் பாலசுப்ரமணியனிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்போது விளக்கம் அளித்த பொறியாளர் - தற்போது தினமும் காயல்பட்டினத்திற்கு 13 லட்சம் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படுவதாகவும் (வழமையாக வழங்கப்படுவது 20 லட்சம் லிட்டர் தண்ணீர்), மழை பெய்ய துவங்கிவிட்டால் - கூடுதல் தண்ணீர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். குடிநீர் விநியோகம் சீரடையும் வரை - நகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நேற்று (ஜூலை 10) பாபநாசம் அணையில் 10 மில்லிமீட்டர் அளவு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் - காயல்பட்டினம் நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய தொகை தற்போது 60 லட்சம் ரூபாய் என உயர்ந்திருப்பதாகவும், இதில் 20 லட்சம் ரூபாய் கடந்த வாரம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் - காயல்பட்டினம் நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய தொகை 2 லட்சம் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரை (வழங்கப்படும் குடிநீர் அளவை பொறுத்து) இருக்கும் என்றும், ஒவ்வொரு மாதமும் தொகையை செலுத்தாமல், காலம்தாழ்த்தியே - மொத்தமாக - காயல்பட்டினம் நகராட்சி தொகையை செலுத்தும் என்றும் பொறியாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர் - தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிபுணர்கள் - காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகைதந்து, குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது - நகராட்சி அலுவலர்களிடம், குடிநீர் விநியோகம் குறித்த சில தகவல்களை கேட்டிருந்தனர். அந்த தகவலை கொண்டு - குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர்.

அந்த தகவல் காயல்பட்டினம் நகராட்சியால் வழங்கப்பட்டதா என காயல்பட்டணம்.காம் - பொறியாளர் பாலசுப்ரமணியனிடம் வினவியது. அந்த தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், உள்ளூர் விநியோகத்தில் தான் பெரும் பிரச்சனை இருப்பதாக - காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகையின் போது, தங்கள் குழு உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Who is responsible for 60Lakhs
posted by Riyath (HongKong) [11 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 19935

I understand two issues from this news.

They are 1> Managing water during summer session and

2> Balance (Credit) in payment.

Surprise is Municipality officers who responsible for these issues complaining about it.

Issue 1> Suggestion already provided district water control department that to solve the problem is in inter-town water distribution

Issue 2> If Municipality is collecting water bill payment from people in regular basis then what reason is to delay in pay to state department.

**Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“குடி” மக்களின் கூடாரம்!  (12/7/2012) [Views - 3579; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved