காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில். 16 மாணவர்கள் “ஆலிம் மஹ்ழரீ” பட்டமும், கண் பார்வையற்ற ஒரு மாணவர் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமும் பெற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில், “மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ” மற்றும் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமளிப்பு விழா, 28.06.2012 வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில், மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில், அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஃபாத்திஹா துஆ ஓதினார்.
கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மஹ்ழரா அரபிக்கல்லூரியின் குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைவரும் “அஹ்மதுல்லாஹ்” பைத்தை நின்றோதினர்.
பின்னர், கல்லூரியின் உதவித் தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ ஆகியோரும், கேரள மாநிலம் கோடம்புழா - தாருல் மஆரிஃப் தலைவர் மவ்லவீ உஸ்தாத் பி.எஸ்.கே.மொய்து பாக்கவீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர்.
(01) மவ்லவீ ஹாஃபிழ் எம்.அப்துல்லாஹ் மஹ்ழரீ
(பேட்டை, திருநெல்வேலி மாவட்டம்)
(02) மவ்லவீ ஏ.அப்துந் நாஸர் மஹ்ழரீ
(குளச்சல், குமரி மாவட்டம்)
(03) மவ்லவீ ஏ.அன்ஸர் மஹ்ழரீ
(தட்டதுமளா, திருவனந்தபுரம், கேரள மாநிலம்)
(04) மவ்லவீ எம்.உமர் மஹ்ழரீ
(ரெகுநாதபுரம், திருவனந்தபுரம், கேரள மாநிலம்)
(05) மவ்லவீ என்.கே.அஹ்மத் முஸ்தஃபா மஹ்ழரீ
(பெளின்சா, காசர்கோடு, கேரள மாநிலம்)
(06) மவ்லவீ என்.தாஹா மஹ்ழரீ
(ஆட்டிங்ஙல், திருவனந்தபுரம், கேரள மாநிலம்)
(07) மவ்லவீ யு.கே.முஹம்மத் ஜுனைத் மஹ்ழரீ
(கண்ணூர், கேரள மாநிலம்)
(08) மவ்லவீ ஆர்.பி.முஹம்மத் ஃபாழில் மஹ்ழரீ
(தேவதியாள், மலப்புரம், கேரள மாநிலம்)
(09) மவ்லவீ பி.எம்.முஹம்மத் மஹ்ழரீ
(பேரோடு, கோழிக்கோடு, கேரள மாநிலம்)
(10) மவ்லவீ டி.ஷமீல் மஹ்ழரீ
(அரிக்கோடு, மலப்புரம், கேரள மாநிலம்)
(11) மவ்லவீ என்.எம்.ஜுனைத் மஹ்ழரீ
(பேராம்பர, கோழிக்கோடு, கேரள மாநிலம்)
(12) மவ்லவீ சி.பி.அஹ்மத் முஜ்தபா மஹ்ழரீ
(குற்றியாடி, கோழிக்கோடு, கேரள மாநிலம்)
(13) மவ்லவீ எம்.அப்துல்லாஹ் உனைஸ் மஹ்ழரீ
(பாரக்கடவு, கோழிக்கோடு, கேரள மாநிலம்)
(14) மவ்லவீ எஸ்.முஹம்மத் தர்வேஷ் மஹ்ழரீ
(ஆழ்வார் திருநகர், சென்னை)
(15) மவ்லவீ எம்.முஹம்மத் பஷீர் மஹ்ழரீ
(காஞ்சிரபுழா, பாலக்காடு, கேரள மாநிலம்)
(16) மவ்லவீ ஏ.எஸ்.அப்துல் ஸலாம் மஹ்ழரீ
(புதிய காவு, கருநாகப்பள்ளி, கேரள மாநிலம்)
ஆகிய 16 மாணவர்கள் “மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ” ஸனது - பட்டச் சான்றிதழ் பெற்றனர்.
அதுபோல, காயல்பட்டினத்தைச் சேர்ந்த முஹம்மத் யாஸீன் ஸிப்கத்துல்லாஹ் என்பவரின் மகன் ஹாஃபிழ் பி.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் என்ற மாணவர், திருமறை குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்து, “ஹாஃபிழுல் குர்ஆன்” ஸனது - பட்டச் சான்றிதழைப் பெற்றார். இம்மாணவர் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் மத்ரஸாக்களில் பயின்று, ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெறும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் - ஹாஃபிழ் பட்டம் பெற்ற இம்மாணவரக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, மாணவர்களுக்கு ஸனது - பட்டச் சான்றிதழ்களை வழங்கி, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் விருதுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர், மஹ்ழரா அரபிக்கல்லூரி குறித்த தகவல்களடங்கிய மலர் வெளியிடப்பட்டது. கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ முதல் பிரதியை வெளியிட, சிறப்பு விருந்தினரான - கேரள மாநிலம் கோடம்புழா தாருல் மஆரிஃப் நிறுவனத்தின் நிறுவனர், அல்உஸ்தாத் அல் அல்லாமா அல்ஹாஜ் அப்துர்ரஹ்மான் பாவா முஸ்லியார் அதனைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர், மற்றொரு சிறப்பு விருந்தினரான - சென்னை க்ரிஸ்டல் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் தலைவர் ஹாஜி கே.ஏ.முஹம்மத் மன்ஸூர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, பட்டம் பெற்ற உலமாக்களுக்கு மார்க்க விளக்க நூற்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வகுப்புகள் வாரியாகவும், கல்லூரியளவிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், ஸனது பெற்ற மாணவர்கள் சார்பில், மவ்லவீ அப்துந் நாஸர் மஹ்ழரீ தமிழிலும், முஹம்மத் முஸ்தஃபா மஹ்ழரீ மலையாள மொழியிலும் ஏற்புரை வழங்கினர்.
பின்னர். மஹ்ழரா அரபிக்கல்லூரியின் www.mahlara.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ இணையதளத்தை துவக்கி வைத்தார்.
நிறைவாக, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் உதவி செயலாளர் ஹாஜி ஏ.கே.கலீலுர் ரஹ்மான் என்ற ஜெஸ்மின் கலீல் நன்றி கூற, துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முன்னாள் - இந்நாள் மாணவர்கள், அவர்தம் பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
K.M.T.சுலைமான்.
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ
மற்றும்
K.M.T.சுலைமான். |