ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 4ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 30.06.2012 அன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 4ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், 30.06.2012 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில், கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. கூட்ட நுழைவாயிலில், உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அமைப்பின் துணைத்தலைவர் எம்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பெசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, பேரவையின் கடந்த பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அத்தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்டமை குறித்து பேரவை செயலாளர் யு.ஷேக்னா விளக்கிப் பேசினார்.
ஆண்டறிக்கை:
பின்னர், பேரவையின் நான்காம் ஆண்டறிக்கையை, பேரவை தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் சமர்ப்பித்தார். (ஆண்டறிக்கை தனிச்செய்தியாக தரப்படும்.)
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டின் வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
பின்னர், இஷா தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டது.
தலைமையுரை:
இடைவேளைக்குப் பின் நடைபெற்ற அமர்வில், கூட்டத் தலைவர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமையுரையாற்றினார்.
காலத்திற்கேற்ற பணிகள்...
பேரவையால் ஆற்றப்பட்ட பணிகளை தனதுரையில் பாராட்டிப் பேசிய அவர், செய்யப்பட்ட பணிகள் குறைவாக இருப்பினும், அவசியமான - காலத்திற்கேற்ற பணிகளையே இப்பேரவை செய்துள்ளது என்று கூறியதோடு, நமதூர் நலப்பணிகளில் ஹாங்காங்வாழ் காயலர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருபவர்கள் என்று புகழ்ந்துரைத்தார்.
அனைத்து காயலர்களும் உறுப்பினராக வேண்டும்...
பேரவையின் நகர்நலப் பணிகள் இன்னும் சிறப்புற - இங்கு வாழும் காயலர்கள் அனைவரும் தங்களை பேரவையில் உறுப்பினர்களாக இணைத்து, ஒப்பற்ற ஒற்றுமையுடன் களப்பணியாற்றிட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய செயற்குழு தேர்வு:
அதனைத்தொடர்ந்து, முன்னிலை வகித்த - பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின், பேரவையின் தேர்வுக் குழுவால் 2012-2014 இரண்டு வருட பருவத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவினரை அறிவித்து அறிமுகப்படுத்த, கூட்டத்தினர் தக்பீர் முழக்கத்துடன் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழு பின்வருமாறு:-
தலைவர்:
எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன்
துணைத்தலைவர்கள்:
பிரபு ஷுஅய்ப்
எம்.எஸ்.சதக்கு மீரான்
செயலாளர்:
எஸ்.எம்.ஜே.முஹம்மத் பாக்கர்
துணைச் செயலாளர்:
ஏ.எல்.முஹம்மத் இர்ஷாத் அலீ
பொருளாளர்:
எம்.எம்.எஸ்.ஷெய்க் மொகுதூம்
செயற்குழு உறுப்பினர்கள்:
அரபி ஹாஜா முஹ்யித்தீன்
எம்.ஜே.ஷெய்க் ஸிராஜுத்தீன்
எம்.ஷேக் அப்துல் காதிர்
எஸ்.எச்.அபுல் ஹஸன்
டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.முஹம்மத் இப்றாஹீம்
எம்.செய்யித் அஹ்மத்
யு.நூஹ்
எம்.ஏ.கே.அப்துல் பாஸித்
எஸ்.ஹமீதுல் ஆஷிக்கீன்
தேர்வுக் குழு உறுப்பினர்கள்:
ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்
ஹாஜி எஸ்.டி.எம்.ஷாஃபிஈ
ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத்
பொறியாளர் ஹாஜி முஸ்தஃபா
ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின்
இவ்வாறு பேரவையின் புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் வழங்கப்பட்டது.
இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தில் பங்கேற்பு...
இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தில் நமது பேரவை பங்கேற்பது குறித்து கருத்து பரிமாறப்பட்டது. பேரவை துவங்கப்பட்ட முதல் இரண்டாண்டுகளில், தலைவர் - செயலர் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் கொண்டு பேரவை செயல்பட்ட காரணத்தால், அப்போது இந்த சுழற்சி முறை நிர்வாகத்தில் முறையாக பேரவை பங்கேற்கவில்லை என்றும். தற்காலங்களில் முறைப்படியான நிர்வாகக் குழு பேரவைக்கு உள்ள காரணத்தால், இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தில் பங்கேற்பது நல்லது என்று கருத்து கூறப்பட்டது.
இது தொடர்பாக புதிய நிர்வாகக் குழு, செயற்குழுவில் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என கூட்டத் தலைவர் தெரிவித்தார்.
பேரவையின் நிதியாதாரத்தைப் பெருக்கல்...
பேரவைக்கு ஆயுள் சந்தா பெறப்பட வேண்டும் என்றும், சந்தா தொகை உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கூட்டத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், “நமது பேரவை Charity Based Association... எனவே, நமக்கு வருடாவருடம் நிதி வசூல் வேண்டும் என்று தெரிவித்ததோடு, சந்தா தொகையை அதிகரிப்பதை தற்போது தவிர்த்துக்கொண்டு, அதிக உறுப்பினர்களை பேரவையில் இணைக்க அனைவரும் பாடுபடுவோம்” என்றார்.
நன்றியுரை:
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, பேரவை பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் நன்றி கூறினார்.
புதிய செயற்குழுவிற்கு வாழ்த்து:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழுவினருக்கு, தற்போது விடைபெறும் செயற்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்த அவர், புதிய நிர்வாகத்திற்கு விடை பெறும் நிர்வாகம் தனது மனப்பூர்வமான ஒத்துழைப்பை நிறைவாக வழங்கும் என்று தெரிவித்தார்.
மறைந்தவருக்கு புகழாரம்:
அத்துடன், கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்ற மர்ஹூம் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் சமுதாயப் பணி மற்றும் பேரவையோடு அவாகள் கொண்டிருந்த பிணைப்பை நெகிழ்வுடன் எடுத்துக்கூறிய அவர், அன்னாரின் மஃபிரத் எனும் பாவப் பிழைபொறுப்பிற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, அவர்கள் காட்டித் தந்த வழியில் நகர்நலப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
நிறைவாக, கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நுஸஹ் மஹ்ழரீ அவர்களின் இறைவேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில், பேரவையின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கியுபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், அதன் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |