காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் விரைவில் பொது மீன் சந்தையை அமைக்க ஆவன செய்யும்படியும், அவ்வாறு அமைக்கப்படும் வரை, தற்போதைய நடைமுறைப்படி பரிமார் தெரு, வண்ணார்குடி கடைத் தெருக்களிலுள்ள இரண்டு சந்தைகளிலும் மீன் விற்பனை செய்யலாம் என்றும், திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்படிக்கை செய்யப்பட்டது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவில் - எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை. இங்கு காய்கறி, மீன் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்தையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் கடைப்பள்ளிக்கு சொந்தமான பரிமார் தெரு மீன் சந்தையில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டுமென்றும் கூறி, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
நாளுக்கு நாள் இப்பிரச்சினை பல்வேறு வடிவங்களில் முற்றி வந்ததையடுத்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகும் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்திருக்கும் ஜெயபால், அங்கு மீன் வணிகம் செய்து வருவோரை ஒரு தரப்பினராகவும், காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கத்தைச் சார்ந்தோரை மற்றொரு தரப்பினராகவும் கொண்டு, திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று (05.07.2012) மாலை 04.30 மணிக்கு சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் காமாட்சி தாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சமாதானக் கூட்டத்தில், மண்டல துணை வட்டாட்சியர் செல்வி, ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், சட்டம் ஒழுங்கு உதவியாளர் பாலசுந்தரம் என்ற பாலா ஆகியோர் சங்கமித்திருந்தனர்.
துவக்கமாக, இரு தரப்பினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. பின்னர், பல்வேறு வழிகளில் சமாதானத்திற்கான முறைமைகள் முன்வைக்கப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், பின்வருமாறு சமாதான உடன்படிக்கையை, சட்டம் ஒழுங்கு உதவியாளர் பால சுந்தரம் என்ற பாலா வாசித்தார்:-
சமாதானக் கூட்ட நடவடிக்கைகள்:
திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டணம் தென்பாகம் கிராமத்தில் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று (05.07.2012) மாலை சுமார் 04.30 மணியளவில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் (ச.பா.தி), திருச்செந்தூர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கண்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
1. ஆணையாளர், இரண்டாம் நிலை நகராட்சி, காயல்பட்டணம்
2. தலைவர், இரண்டாம் நிலை நகராட்சி, காயல்பட்டணம்
3. காவல் ஆய்வாளர், ஆறுமுகநேரி
4. திரு.அப்துல் அஜீஸ், தலைவர் காயல்பட்டணம் அனைத்து மீன் சில்லறை வியாபார தொழிலாளர் சங்கம், காயல்பட்டினம்
5. திரு.ஜெயபால், த-பெ.அந்தோணிமுத்து, வன்னார்குடி கடைத்தெரு, காயல்பட்டினம்
6. திருமதி.பிரின்சி, புன்னக்காயல் (நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை மீன் வியாபாரிகள் சார்பாக)
மேற்படி சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
தற்போது இயங்கி வரும் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் (25 கடைகள் கொண்டது) ஏற்கனவே வியாபாரம் செய்து வரும் திருமதி.பிரின்சி, புன்னக்காயல் மற்றும் 9 நபர்களும், அது தவிர காயல்பட்டினம் அனைத்து மீன் சில்லரை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அவர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்ததின் அடிப்படையில் 10 நபர்களும் நகராட்சியின் சார்பாக புதிய பெரிய சந்தை தேர்ந்தெடுத்து செயல்படும் வரை இதே நகராட்சி சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி சார்பாக அனைத்து மீன் வியாபாரிகளும் வியாபாரம் செய்ய போதுமான இடம் தேர்வு செய்யப்பட்டு சந்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மூன்றுமாத காலத்திற்குள் முடிவு செய்யுமாறு ஆணையாளர், காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேற்படி இடம் தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து பொதுவான இடத்தினை தேர்ந்தெடுக்க காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி தலைவி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதற்கான செயல்பாடுகள் நகராட்சியின் அவசரக்கூட்டம் மூலம் மேற்கொள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவி இருவரும் மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதுவரையில் இருதரப்பினரும் எவ்வித பிரச்சனைகளுமின்றி இரு சந்தைகளிலும் மீன் வியாபாரம் செய்யலாம் எனவும், பொதுவான சந்தை நகராட்சியால் அமைந்த பின்னர் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி எல்லைக்குள் வேறு எங்கிலும் மீன் சந்தையோ, கடைகளோ அமைக்ககூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இம்முடிவினை ஏற்று அனைத்து தரப்பினரும் இதில் மனப்பூர்வமாக கையொப்பமிடுகிறோம்.
இவ்வாறு சமாதான உடன்படிக்கை இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டு, கைச்சான்றிடப்பட்டது.
பின்னர், இதுகுறித்த அறிக்கை பின்வருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது:-
திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டணம் தென்பாகம் கிராமத்தில் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று (05.07.2012) மாலை சுமார் 04.30 மணியளவில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் (ச.பா.தி), திருச்செந்தூர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:-
தற்போது இயங்கி வரும் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் (25 கடைகள் கொண்டது) ஏற்கனவே வியாபாரம் செய்து வரும் திருமதி.பிரின்சி, புன்னக்காயல் மற்றும் 9 நபர்களும், அது தவிர காயல்பட்டினம் அனைத்து மீன் சில்லரை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அவர்கள் எழுத்துப்பு+ர்வமாக உறுதி அளித்ததின் அடிப்படையில் 10 நபர்களும் நகராட்சியின் சார்பாக புதிய பொpய சந்தை தோந்தெடுத்து செயல்படும் வரை இதே நகராட்சி சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி சார்பாக அனைத்து மீன் வியாபாரிகளும் வியாபாரம் செய்ய போதுமான இடம் தோவு செய்யப்பட்டு சந்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மூன்றுமாத காலத்திற்குள் முடிவு செய்யுமாறு ஆணையாளர், காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேற்படி இடம் தோவு தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து பொதுவான இடத்தினை தோந்தெடுக்க காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி தலைவி கேட்டுக்கொள்ளப்பட்டார். இதற்கான செயல்பாடுகள் நகராட்சியின் அவசரக்கூட்டம் மூலம் மேற்கொள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவி இருவரும் மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதுவரையில் இருதரப்பினரும் எவ்வித பிரச்சனைகளுமின்றி இரு சந்தைகளிலும் மீன் வியாபாரம் செய்யலாம் எனவும், பொதுவான சந்தை நகராட்சியால் அமைந்த பின்னர் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி எல்லைக்குள் வேறு எங்கிலும் மீன் சந்தையோ, கடைகளோ அமைக்ககூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவினை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் வேறு சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |