தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவில் - மஸ்ஜிதுத் தவ்ஹீத் என்ற பெயரில் புதிய ஜும்ஆ பள்ளி, 13.07.2012 வெள்ளிக்கிழமைகாலை 12.30 மணிக்கு ஜும்ஆ தொழுகையுடன் துவக்கப்படுகிறது.
அன்று மாலை 04.30 மணிக்கு தர்பிய்யா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்விற்கு மரைக்கார் ஆலிம் தலைமை தாங்குகிறார். சாலப்பா, வி.பி.எம்.ஷம்சுத்தீன், எம்.ஒய்.ஹாஜா முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ் அலீ தர்பிய்யா நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்.
ஜும்ஆ தொழுகை மற்றும் தர்பிய்யா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். |