2012-2013-ஆம் கல்வியாண்டில் பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கான இருவழி பயண போக்குவரத்துக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
2012-2013-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும்
ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50% இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த சலுகையினைப் பெற சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ / மாணவிகள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் (COUNSELLING CALL LETTER) ஒளி நகலை (XEROX COPY) சம்பந்தப்பட்ட அரசு விரைவு
போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒளி நகலை (XEROX COPY) பெற்றுக் கொண்ட அலுவலர்கள் 50% கட்டணச் சலுகை வழங்கப்பட்டதென அழைப்புக் கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை 1+1 மாணவர்களுக்கு வழங்குவர்.
இதே நடைமுறை கலந்தாய்வினை முடித்து ஊருக்கு திரும்ப செல்வதற்கும் பொருந்தும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை. |