தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள், சாலைகள் தரமற்றதாக இருந்தால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டர்கள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆஷிஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொற்கை பஞ்சாயத்தில் சுற்றுலாத்துறை மூலம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் தகவல் மைய கட்டுமான பணிகள், குழந்தைகள் மையம், கொடுங் கனி வரத்துக்கால் ஆழப்படுத்தி கரை பலப்படுத்தும் பணி, தெற்கு வாழவல்லான் சுடுகாட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கட்டிடங்கள் உறுதியாக இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்ல தரமான மணலை பயன்படுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் கட்டப்படும் அரசு கட்டிடங்கள், சாலைகள் தரமானதாக இருக்க வேண்டும். குறைகள் காணப்பட்டால் காண்டிராக்டர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் கோட்ட பொறியாளர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பஞ்சாயத்து) பாலசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் நயினார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |