இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் மேடைப் பேச்சு பயிற்சி, இம்மாதம் 26ஆம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர உறுப்பினர்கள் மற்றும் மேடைகளில் பேச ஆர்வப்படும் பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்குடன், கடந்த காலங்களில் காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் கிளை சார்பில் சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் சொற்பயிற்சி மன்றம் நடத்தப்பட்டு வந்தது. சொந்த அலுவலகம் என்று ஒன்று இல்லாதிருந்த காரணத்தால், பின்னர் அது இடைநின்று போனது.
இந்நிலையில், தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்த அலுவலகம் அமைந்துள்ளதையடுத்து, “சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை”யை ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று துவக்கிட, 24.06.2012 அன்று நடைபெற்ற கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், 26.06.2012 செவ்வாய்க்கிழமை இரவு 07.30 மணிக்கு சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் சொற்பயிற்சி மன்றம் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் முன்னிலை வகித்தார்.
ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யிது அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - காயிதேமில்லத் பேரவையின் காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பி.செய்யித் இஸ்மாஈல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர நிர்வாகிகளான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண்டு ஸாஹிப், ஹாஜி எம்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஜெ.உமர், எம்.இசட்.சித்தீக், ஹாஜி எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், பிரபு எம்.எம்.செய்யித் அஹ்மத் நெய்னா மற்றும் பலர், மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
இப்பயிற்சிப் பாசறை வகுப்பில், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எஸ்.ஏ.கே.முஹம்மத் அப்துல் காதிர், ஜெ.அய்யூப் சுல்தான், எஸ்.எம்.எம்.ஸூஃபீ ஹுஸைன், எம்.எம்.இஸ்மத் ஹாரிஸ், கே.எஸ்.எம்.பி.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ், டி.முஹம்மத் ஆஷிக் ஷரீஃப், எம்.ஏ.எஸ்.முஹம்மத் அலீ, ஏ.ஆர்.முஹம்மத் ஃபைஸல், ஜெ.எஸ்.முஹம்மத் ஷாஜின், பி.முஹம்மத் ஆஷிக், எஸ்.எம்.ஜாஃபர் அலீ, எம்.ஏ.ஆர்.அய்யாஷ் ரஹ்மான், எம்.அப்துல் அஜீஸ் ஆகிய மாணவாகள் பயிற்சி பெற்றனர்.
கட்சியின் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் நன்றி கூறினார். ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மாதமிருமுறை நடைபெறும் இந்த சொற்பயிற்சி மன்றத்தில், இம்மாணவர்கள் தொடர்ந்து 6 வகுப்புகளில் கலந்துகொள்வர். கடைசி வகுப்பை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்னர், புதிய வகுப்பிற்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
பயிற்சிப் பாசறை ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் மாணவரணி மற்றும் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |