செய்தி எண் (ID #) 8675 | | | புதன், ஜுலை 4, 2012 | செப்.01 முதல் கொழும்பு - மதுரை மலிவுக் கட்டண விமான சேவை? | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3710 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய | |
இலங்கையின் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் சார்பில், வரும் செப்டம்பர் 01ஆம் தேதி முதல், கொழும்பு - மதுரை மார்க்கத்தில் மலிவுக் கட்டண விமான சேவை (Budget Airways) துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாரந்தோறும் இம்மார்க்கத்தில் மூன்று விமான சேவையை, திங்கள் - புதன் - வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்நாட்களில் 14.20 மணிக்கு கொழும்புவிலிருந்து புறப்படும் விமானம், 15.20 மணிக்கு மதுரையை வந்தடையும். மதுரையிலிருந்து 16.15 மணிக்கு புறப்படும் விமானம் 17.15 மணிக்கு கொழும்பு நகரைச் சென்றடையும்.
சேவை துவக்க அனுமதியை (Start clearance) மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம், இந்தியாவின் Airport Authority of Indiaவிடமிருந்து எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் உதவி:
S.I.ஹைதர் அலீ,
மற்றும்
S.அப்துல் வாஹித், |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|