காயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனை செய்திடத் தூண்டும் நோக்குடன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், கலந்துரையாடல் - பரிசளிப்பு என இரண்டு அமர்வுகளாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துரையாடல் நிகழ்ச்சி அன்று காலையிலும், பரிசளிப்பு விழா மாலையிலும் நடைபெற்றது.
பரிசளிப்பு விழா:
மாலை 05.00 மணிக்குத் துவங்கிய பரிசளிப்பு விழாவிற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார்.
முன்னிலை வகித்தோர்:
தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஜியாவுத்தீன், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, ஜுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்முறை:
இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் பி.ஏ.உக்காஷா இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, விழாவிற்குத் தலைமையேற்றிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
அறிமுகவுரைகள்:
பின்னர், இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம் குறித்து, அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் குறித்து அதன் அறங்காவலர் பி.ஏ.புகாரீ, ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷ்மிதா குறித்து இலங்கை காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
பெட் பொறியியல் கல்லூரி அறங்காவலர் வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சிக்கு முழு அனுசரணையளித்திருந்த வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் பொறியாளர் ஏ.அப்துல் ரஸ்ஸாக் வாழ்த்துரை வழங்கினார்.
அவரது உரையைத் தொடர்ந்து. பெட் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து விழாவில் விளக்கப்பட்டது. குறிப்பாக, முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகை, வாராந்திர ஜும்ஆ தொழுகை, ரமழான் காலங்களில் ஸஹர் உணவு, இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் என பல்வேறு வசதிகள் எல்லாக் காலங்களிலும் தொய்வின்றி செய்துகொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் க்ளாடிஸ் ஸ்டெல்மா சிறப்புரையாற்றினார்.
மாநில சாதனையாளருக்கு பரிசளிப்பு:
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நடைபெற்றது. துவக்கமாக, இவ்விழாவின் நாயகரான - ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று - தமிழ்நாடு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷ்மிதாவுக்கு - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூபாய் பத்தாயிரம் பணப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது. அதனை சிறப்பு விருந்தினர் க்ளாடிஸ் ஸ்டெல்மா சாதனை மாணவியிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதன்மாணவிக்கு - காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் அதன் தலைவரும், விழா தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
மாநில சாதனை மாணவி ஏற்புரை:
பின்னர், மாநிலத்தின் முதன்மாணவி எஸ்.சுஷ்மிதா ஏற்புரை வழங்கினார். இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், இதனை ஏற்பாடு செய்தவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.
தனது இந்த சாதனையை எட்டுவதற்காக கூரிய சிந்தனையுடன் - கவனச் சிதறல்களுக்கு இடமளிக்காமல் பயின்றதாகவும், அதற்கு தனது பள்ளியின் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர் என அனைவருமே உறுதுணையாயிருந்ததாகவும் தெரிவித்த அவர், இந்நிகழ்ச்சியை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் www.topperstalk.com இணையதளத்தை தான் தொடர்ந்து பார்தது வந்ததாகவும், முந்தைய ஆண்டுகளின் சாதனை மாணவ-மாணவியர் அத்தளத்தில் அளித்திருந்த பல குறிப்புகள் - மாநில அளவில் சாதனை பெற வேண்டும் என தன்னைத் தூண்டியதாகவும் தெரிவித்தார்.
நகர சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு:
அடுத்து, நடப்பாண்டு ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வுகளில் நகரளவில் சாதனை பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி. - நகரளவில் முதல் மூன்றிடம் பெற்றோருக்கு பரிசுகள்:
துவக்கமாக, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு - கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
முதலிடம் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் - மொகுதூம் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் ஷாதுலீ என்பவரின் மகன் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தானுக்கு, ரூபாய் 3,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், விழா தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் வழங்கினார்.
நகரளவில் இரண்டாமிடம் பெற்ற - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவி - சதுக்கைத் தெருவைச் சார்ந்த முஹம்மத் உமர் என்பவரின் மகள் எம்.ஓ.ஜெய்னப் ஷர்மிளாவுக்கு, ரூபாய் 2,000 பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, பெட் பொறியியல் கல்லூரியின் செயலாளர் எம்.செய்யித் முஹம்மத் வழங்கினார்.
நகரளவில் மூன்றாமிடம் பெற்ற - முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி - கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த விளக்கு செய்யித் முஹம்மத் என்பவரின் மகள் வி.எஸ்.எம்.மஷ்கூராவுக்கு ரூபாய் 1,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, பெட் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் பொறியாளர் ஏ.அப்துல் ரஸ்ஸாக் வழங்கினார்.
எஸ்.எஸ்.எல்.சி. - பாடங்களில் 100க்கு 100 பெற்றோருக்கு பரிசுகள்:
அடுத்து, எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத் தேர்வில் பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு - சிங்கப்பூர் காயல் நல மன்றம் மற்றும் தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்புகளின் சார்பில் ரூபாய் 500 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான், அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எம்.எம்.அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மன், கணிதம் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எம்.ஓ.ஜெய்னப் ஷர்மிளா ஆகியோருக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எச்.எம்.உம்மு ஹபீப் ஃபாத்திமா, சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற அதே பள்ளியின் மாணவி எம்.எம்.ஹமீதா ஆகியோருக்கு, ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரான எஸ்.ஜெ.அனிஷா விர்ஜின் மேரி, எம்.மாலதி ஆகியோருக்கு, தாய்லாந்து காயல் நல மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
எஸ்.எஸ்.எல்.சி. - ஹாஃபிழ் மாணவர்களுக்கு சிறப்புபு் பரிசுகள்:
அடுத்து, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து - ஹாஃபிழ் பட்டம் பெற்ற பின்னர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதிய இரண்டு மாணவர்களுக்கு - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் சார்பில் பணப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவர் ஹாஃபிழ் ஜே.ஏ.காழி அலாவுத்தீன், அதே பள்ளியின் மாணவர் ஹாஃபிழ் எம்.எஸ்.காஸிம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு முறையே ரூபாய் 3,000, ரூபாய் 2,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இவ்விருவரும் நகரளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர்களாவர். பரிசுகளை அம்மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் ஆகியோர் வழங்கினர்.
பத்தாம் வகுப்பு முடித்த ஹாஃபிழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் இவ்வகை பரிசுத் திட்டம், நடப்பாண்டு - மிகக் குறைந்த கால அவகாசமே இருக்கையில் இறுதி வடிவம் செய்யப்பட்டதால், ஹாஃபிழ் மாணவர்களின் பெயர் பட்டியலில், முதலிடம் பெற்ற மாணவரின் பெயர் விடுபட்டுப் போனது. பரிசளிப்பு விழா நிறைவுற்ற பின்னரே இத்தகவல் இக்ராஃவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், 03.07.2012 அன்று மாலையில், இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் - குத்துக்கல் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் ஷெய்க் முஹம்மதுக்கு துபை காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 3,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் முன்னிலையில், இக்ராஃ தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வழங்கினார்.
ப்ளஸ் 2 - நகரளவில் முதல் மூன்றிடம் பெற்றோருக்கு பரிசுகள்:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நகரளவில் முதலிடம் பெற்ற - சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி - கடையக்குடியைச் சேர்ந்த சி.எஸ்ஜேசுதாஸ் என்பவரின் மகள் ஜெ.அபிஷா ஜூலியட் மேரிக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 5,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த முஹம்மத் ஹஸனா லெப்பை என்பவரின் மகன் எம்.எச்.முஹம்மத் அபூபக்கருக்கு, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 3,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை, விழா தலைவரும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் வழங்கினார்.
ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் மூன்றாமிடம் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - சின்ன நெசவுத் தெருவைச் சார்ந்த கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மகன் எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக் என்ற மாணவருக்கு, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 2,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அதனை, அம்மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் வழங்கினார்.
ப்ளஸ் 2 - மனையியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றவருக்கு பரிசு:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில், மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற - அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி - கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த ஃபாரூக் அலீ என்பவரின் மகள் எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 2,500 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, அம்மன்றத்தின் செயற்குழ உறுப்பினர் சாளை நவாஸ் வழங்கினார்.
ப்ளஸ் 2 - பாடங்களில் 200க்கு 200 பெற்றோருக்கு பரிசு:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில், பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் (100 சதவிகித மதிப்பெண்) பெற்ற மாணவியருக்கு தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 500 பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கணிதம் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்களான - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி - கோமான் தெருவைச் சார்ந்த ஹாஜி ஏ.லுக்மான் என்பவரின் மகள் எல்.தாஹா பரீரா, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி - சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஹரிஹரபுத்திரன் என்பவரின் மகள் எச்.பொன் கோமதி ஆகிய மாணவியருக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.கலீல் என்ற ஜெஸ்மின் கலீல், ரூபாய் 500 பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
ப்ளஸ் 2 - கட் ஆஃப் சிறப்புத் தேர்ச்சிக்கு பரிசு:
அடுத்து, கட்-ஆஃப் சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலில், நகரளவில் முதலிடம் பெற்ற - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி - கோமான் தெருவைச் சார்ந்த ஹாஜி ஏ.லுக்மான் என்பவரின் மகள் எல்.தாஹா பரீராவுக்கு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ரூபாய் 3,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.கலீல் என்ற ஜெஸ்மின் கலீல் வழங்கினார்.
ப்ளஸ் 2 - ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு பரிசுகள்:
அடுத்து, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து - ஹாஃபிழ் பட்டம் பெற்ற பின்னர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து ப்ளஸ் 2 தேர்வெழுதிய இரண்டு மாணவ-மாணவியருக்கு - ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் பணப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஹாஃபிழ் மாணவ-மாணவியருள் முதலிடம் பெற்ற - சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி - அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த எம்.எல்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் என்பவரின் மகள் ஹாஃபிழா எம்.எஸ்.ஆயிஷா முஃப்லிஹாவுக்கு ரூபாய் 5,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழை, அபூதபீர் காயல் நல மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிஃபாய் சுல்தான் வழங்கினார்.
இரண்டாமிடம் பெற்ற - முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவர் - நெய்னார் தெருவைச் சார்ந்த எம்.ஏ.முஹம்மத் அய்யூப் என்பவரின் மகன் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் அலீ என்ற மாணவருக்கு, ரூபாய் 3,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழை, அபூதபீ காயல் நல மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்கினார்.
மூன்றாமிடம் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ என்பவரின் மகன் ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷாவுக்கு ரூபாய் 2,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழை, அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ வழங்கினார்.
ப்ளஸ் 2 - 1200க்கு 1100க்கு மேல் மதிப்பெண் பெற்றோருக்கு பரிசுகள்:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1100 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவ-மாணவியருக்கு ரூபாய் 300 பணப்பரிசும், பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பணப்பரிசுகளுக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் அனுசரணையளித்திருந்தார். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.
துவக்கமாக, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த
எஸ்.ஜெ.அபிஷா ஜூலியட் மேரி,
எம்.எஸ்.ஆயிஷா முஃப்லிஹா,
எம்.எம்.எஸ்.எச்.முத்து ஆமினா,
ஏ.டபிள்யு.மர்யம் மஸ்ரூரா
ஆகியோருக்கு எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அடுத்து, எல்.கே.மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த
எம்.எச்.முஹம்மத் அபூபக்கர்,
எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக்,
ஜெ.ஃபஹீம் அஹ்மத்,
எச்.சத்தாம் ஹுஸைன்,
வி.எம்.செய்யித் மீரான்
ஆகியோருக்கு, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அடுத்து, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவி எஃப்.ஃபஹ்மிதா ஷீரீனுக்கு - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பணப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவி எல்.தாஹா பரீராவுக்கு - அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா பணப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
ப்ளஸ் 2 - 1200க்கு 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு பரிசுகள்: அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1000 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவ-மாணவியருக்கு ரூபாய் 200 பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பணப்பரிசுக்கு,
இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான்,
இக்ராஃ மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது,
இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
மர்ஹூம் அல்ஹாஜ் சி.லெ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் நினைவாக - அன்னாரின் மகன் ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை,
ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ்,
தம்மாம் காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி சாளை ஜியாவுத்தீன்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்அப்துல் வாஹித்
ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.
துவக்கமாக, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களான
எம்.கெஸ்டன் ,
சி.அபிஷேக் டெபி கிஃப்ட்ஸன்,
ஜெ.விஜயராஜ்,
எம்.மாஹின்
ஆகியோருக்கு, சிறப்பு விருந்தினருடன் வந்திருந்த சங்கரய்யா மற்றும் நகரப் பிரமுகர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் பரிசுகளையும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
அடுத்து, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களான
எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் இர்ஷாத்,
என்.முஹம்மத் அல்தாஃப் ஹுஸைன்,
ஆர்.எஸ்.அப்துர்ரஹ்மான் ஜுஹைர்,
என்.உமர் முஹம்மத் முஹ்யித்தீன்,
ஜெ.பி.சத்தாம் ஹுஸைன்,
எஸ்.ஏ.முஹம்மத் ரிஃப்கான்,
ஏ.எஸ்.ஃபாஹிம் ரஹ்மத்துல்லாஹ்,
எஸ்.க்ளாட்வின்,
பி.எம்.முஹம்மத் ரமீஸ்,
வி.மகேஷ்
ஆகியோருக்கு, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, இக்ராஃ மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஐ.ஐ.எம்.பைத்துல்மால் பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் ஆகியோர் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
அடுத்து, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்களான
எம்.கமல் மணி,
எம்.ஏ.முஹம்மத் அலீ
ஆகியோருக்கு, நகரப் பிரமுகர் ஹாஜி எஸ்.ஓ.கியாத் சேட் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அடுத்து, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியரான
டி.சந்தனமாரி,
ஆர்.ப்ரின்ஸி,
எஸ்.செய்யித் அலீ ஃபாத்திமா,
எம்.மரிய ஷாய்ஜி,
எஸ்.சத்திய நந்தினி,
எஸ்.அபிஷா,
எம்.ஷரீஃபா ஸஃப்ரோஸ்,
ஐ.மொஹது ரிஸ்வானா,
எஸ்.முத்து பஜிலா பர்வீன்,
எஸ்.சாரதா ப்ரியா,
எச்.பொன் கோமதி,
எஸ்.ஜெ.ஃபாத்திமா தமீனா,
ஏ.ஸபீனா,
யு.ஜெஸ்மின் ஃபாத்திமா,
எம்.பஜிலா பானு,
டி.அஞ்சுகம்
ஆகியோருக்கு, இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி சாளை நவாஸ், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ ஆகியோர் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
அடுத்து, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியரான
கே.எம்.ஏ.எஸ்.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா,
எஸ்.எச்.ஃபாத்திமா பர்ஸானா,
என்.எம்.யு.முத்து பீவி ஃபாத்திமா,
எஸ்.எச்.மக்பூலா,
ஐ.ஏ.ஹைருன்னிஸா முஃப்லிஹா,
எஸ்.ஜெய்னப் அப்ரார்,
எம்.ஜே.நஸ்ரீன்,
எஸ்.ஷபீனா ஃபாத்திமா,
எஸ்.ஸல்மா,
எம்.ஐ.சித்தி கதீஜா,
ஆர்.ஆர்.சித்தீக் ரிஃப்கானா,
பாளையம் சித்தி ஃபஸ்லிய்யா,
என்.முத்து ஜுனைதா தஸ்லீமா,
எம்.ஏ.சி.சித்தி ஹவ்வா,
ஜெ.நளீஃபா ரஹானா,
எம்.ஆஷிகா பீவி
ஆகியோருக்கு, துளிர் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஜியாவுத்தீன், இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எல்.கே.பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், இலங்கை காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை ஆகியோர் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
அடுத்து, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரான
பி.ருக்ஷானா பேகம்,
எஸ்.ஏ.ஃபாத்திமா அர்ஷதா,
என்.கதீஜா ஃபாத்திமா பழ்லிய்யா,
எல்.டி.அஹ்மத் நஸ்ஹத் குத்ஸிய்யா
ஆகியோருக்கு, இக்ராஃ செயற்குழு உறுப்பினரான ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எல்.ஸதக்கத்துல்லாஹ், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் ஆகியோர் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில், நேரில் வந்து பரிசுகளைப் பெற இயலாத மாணவ-மாணவியர் சார்பில் அவர்கள்தம் பெற்றோரும், உறவினர்களும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.
நகரின் சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகள்:
அடுத்து, நகரின் சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
ப்ளஸ் 2 - 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள்:
துவக்கமாக, ப்ளஸ் 2 தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூபாய் 2,500 பணப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
நடப்பாண்டு 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கான பரிசை, அதன் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷாவிடமும், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளிக்கான பரிசை அதன் தலைமையாசிரியை எம்.ஜெஸீமாவிடமும், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கான பரிசை, அப்பள்ளியின் சார்பில் அதன் நிர்வாகக் குடும்பத்தினர் சார்பில் ஹாஜி வாவு ஷம்சுத்தீனிடமும் - சிறப்பு விருந்தினரான மாவட்ட கல்வி அலுவலர் க்ளாடிஸ் ஸ்டெல்மா வழங்கினார்.
ப்ளஸ் 2 - சிறிய-நடுத்தர - முதலிடம் பெற்ற பள்ளிக்கு பரிசு:
அடுத்து, சிறிய - நடுத்தர மாணவ எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளுள் சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கு ரூபாய் 5,000 பணப்பரிசு மற்றும் காயல்பட்டணம்.காம் சிறந்த பள்ளிக்கான விருது ஆகியன தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது. அதனை, அப்பள்ளியின் நிர்வாகக் குடும்பத்தினர் சார்பில் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீனிடம், விழா தலைவரும், நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் வழங்கினார்.
ப்ளஸ் 2 - பெரிய - முதலிடம் பெற்ற பள்ளிக்கு பரிசு:
அடுத்து, அதிக மாணவ எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளுள் சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளிக்கு, ரூபாய் 5,000 பணப்பரிசு, காயல்பட்டணம்.காம் சிறந்த பள்ளிக்கான விருது ஆகியன தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது. அதனை, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமாவிடம், இக்ராஃ கல்விச் சங்க தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்ற தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வழங்கினார்.
ப்ளஸ் 2 - நகரளவில் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள்:
அடுத்து, நகரின் அனைத்து பள்ளிகளிலும் மூதல் மூன்றிடங்களைப் பெற்ற பள்ளிகளுக்கான “காயல்பட்டணம்.காம் சிறந்த பள்ளிக்கான விருது” தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.
முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, இரண்டாமிடம் பெற்ற அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, மூன்றாமிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா ஆகியோரிடம், விழா தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் வழங்கினார்.
நினைவுப் பரிசுகள்:
அடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர் க்ளாடிஸ் ஸ்டெல்மாவுக்கு விழா தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விழாவிற்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்-க்கு இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நினைவுப் பரிசு வழங்கினார்.
விழா நிறைவு:
நிறைவாக, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாரா - நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவியரின் பெற்றோர், பள்ளிகளின் ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |