செய்தி எண் (ID #) 8616 | | |
வியாழன், ஜுன் 14, 2012 |
வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ? |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 6321 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் நகராட்சியில் பல பணிகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக - நகர்மன்றத் தலைவர், அலுவலர்களுக்கு வளைந்து கொடுக்காததுதான் என சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. பல பணிகள் நிலுவையில் இருப்பதால், உறுப்பினர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேர்மையானவர்கள் என கருதப்பட்ட ஒரு சில உறுப்பினர்களும் கூட, “காரியம் ஆக வேண்டும் என்றால் சில விஷயங்களை கண்டுக்கொள்ளக் கூடாது” என்று கூறத் துவங்கியுள்ளனர். காயல்பட்டணம்.காம் உடன் பேசிய ஓர் உறுப்பினர், “வெளியில் இருந்து திருத்த நினைப்பது எளிது; உள்ளே வந்து பார்த்தால்தான் தெரியும்” என்றார். ஆகவே சில விஷயங்களை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என மேலும் கூறினார்.
காயல்பட்டணம்.காமிடம் ஓர் ஒலிப்பதிவு தற்போது உள்ளது. அதில் காயல்பட்டினம் நகராட்சியின் சில உறுப்பினர்களின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. நடப்பு நிலைமையை தெளிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ள அந்த ஆதாரத்தில் - சில நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
அந்த ஒலிப்பதிவை கேட்க இங்கு அழுத்தவும்.
ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் - கீழே தரப்பட்டுள்ளது:
... அந்த சங்கரே சொல்லிட்டு போறான், கவுன்சிலரையெல்லாம் ஃப்ரீயா உடுங்க. சொன்னானா இல்லையா? ஒங்க முன்னாலதானே? ஆங்...?
நா நிக்கிறேன்... ஆனா வரல்லே... நீங்க கேட்டீங்களே ஏன் வரலேன்னு சொல்லி... அப்பல்லாம் அங்க நிக்கிறேன்... அவங்களையெல்லாம் ஃப்ரீயா உடுங்க... ஏதாவது கெடச்சாதான் அவங்க வந்து ஐக்கியத்துக்கு ஒங்களோட போவாங்க... அதிகாரிகள வந்து... கமிஷனர் அதிகாரிகள வந்து கண்டுக்காதீங்க...
ஸ்பீடு பிரேக்தானே...? நாளைக்கு வரச்சொல்றா... போடுறா ஸ்பீடு பிரேக்க... அதுல ஒரு ஐம்பதினாயிரம் ரூவா செலவழிச்சிட்டு,
ஐம்பதினாயிரம் ரூபாய் பாக்கெட்ல வச்சிட்டு போவோம்...
செயல்படும்... செயல்படுற வேலைய பாப்போம்... நம்ம ஒன்னு நடக்கனும். இல்லேன்னு வச்சுக்குங்க ... நம்மளுக்கு கெடைக்கனும்,
அதுலேர்ந்து நம்ம சின்னச்சின்ன வேலைய பாத்துக்கிட்டா போதும்.
ரெண்டாவது... ஈ டெண்டர்னு ஒன்னு கொண்டு வந்திருக்காங்க... தெரியுமா? அவன் போட்டிருக்கான் நெட்வொர்க்ல...
ஈ டெண்டர்னா என்னா?
ஈ டெண்டர்னா இது எப்டீன்னா.... மொத்தம் - அதாவது இந்தியா ஃபுல்லா எவன் வேணும்னாலும் எடுத்துக்கலாம்... நெட்டு மூலமா
யாருமே துட்ட வாங்காத அளவுக்கு பண்ணனும்னு நெனைக்கிறது பெரிய தப்பு! நீங்க வாங்கலேங்கறது வேறு விஷயம். வாங்கவே கூடாதுன்னு சொல்லி ஈ - டெண்டர் அதுமாதிரி எல்லாம் கொண்டுவரீல. செகண்ட் பைப்லைன் திட்டத்துக்காக வேண்டியே அத கொண்டு வர்றாங்க...
செகண்ட் பைப்லைன் திட்டத்துல ஒரு கவுன்சிலருக்கு இரண்டரை லட்சம் ரூவா... ******
“நாலு லட்ச ரூவாப்பா, போப்பா...”.
இல்லை, அதிகாரி, கீழே இருக்கிற லோக்கல் டிக்கெட் எல்லாம் போனா - பைப் லைனுக்கு மட்டும் - எந்த குறையும் இல்லாம - இரண்டரை லட்ச ரூவா கெடைக்கும். ஆனா அவங்க அதையெல்லாம் ஓய்க்கனும்னு நினைக்கிறாங்க ...
“அதையெல்லாம் அவங்க ஓய்ச்சுருவாங்களா? ...”
இல்லே... அவங்க ஓய்சுடுவாங்க... அவங்க நீ நெனைக்கிற மாதிரி இல்ல... அவங்க வந்து பம்மி பம்மி பேசுவாங்க... நீங்களே பார்த்திருப்பீங்க அனுபவத்துல... ஆறு மாசத்துல...
ஒன்னு சொல்றேன் கேளுங்க... ------... நீ ரெடியா... நான் ஓபனா பேசுறேன் கேளுங்க... அவங்க எல்லா ப்ளானும் பண்ணிட்டு இருக்காங்க...
மேல... ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது ______ அண்ணன் ... ஒன்னும் தெரியாது...
ஒங்களுக்கு ஃபுல்லா டீடெய்ல் ஃபுல்லா எறங்கி நாங்க வந்து... நான் டெண்டர்ல இருக்கிறேன்... ரெண்டாவது இதுவுடைய ஃபுல் டீடெய்ல எடுத்துட்டு இருக்கோம்... இதுவந்து கெடைக்காத அளவுக்கு கொண்டுவறதுக்குதான் இந்த ஈ டெண்டரை எடுத்திருக்கிறாங்க...
பாப்போம்... சாயந்திரம் வரசொல்வோம் ... இதுக்கு என்னான்னு பேசி ஒரு முடிவெடுப்போம்டா மொதல்லே... நம்ம ஏதாவது பார்ப்போம்டா... வருமானம்
அதாவது நாம இப்ப வந்து ... சும்மா சுவர் எண்ணிட்டு இருக்கோம் …. ஆமா... கவுரவம் தடுக்குதுல்லே...?
அதாவது ஃபர்ஸ்டு ******* ******* பூரா நம்மள விட்டு போயிட்டான்... அவரு கவுன்சிலராயிட்டாரு... நமக்கு சாத்தியப்படாது...
அதெல்லாம் இல்ல... நா என்ன தெரியுமா செய்வேன்...? ஆள் வரலேன்னா நானே கச்சை கெட்டிட்டு பாலம் போட்டுறுவேன்... ஆள் வரலேன்னு வச்சிக்கோங்க... கச்சை கெட்டி பாலம் போடுறதுக்கு கவுரவம் தடுக்குது... போயி அவன் வீட்டுல போயி கெஞ்சி கூத்தாடி... “நல்லா இருப்பா... வா ... கூட ஒரு நூறு ரூபாயாவது தர்றேன்னு கூட்டிட்டு வந்து போடுறா ******* ******* அதனால என்ன நடக்கும்? நஷ்டம்... புரிதா? தொழில
இருக்கிறதால தொழிலும் பாதிப்பு நமக்கு...
ஏண்டா இதுக்குள்ள வந்தோம்னு ஆயிட்டுது மக்கா இப்போ...?
இப்ப எனக்கு அதெல்லாம் தெரியாது...
நான் நெனைக்கிறேன்... கவுன்சிலர்லாம் ஒத்துமையா இருந்து செயல்பட்டு, எதையாவது சாதிப்போம்... எதையாவது கிடைக்குதான்னு
பார்ப்போம் ...
ஒலிப்பதிவை கேட்க இங்கு அழுத்தவும்.
|