காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர (மே மாத) கூட்டம், 31.05.2012 வியாழக்கிழமை மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டப் பொருளை நகர்மன்றத் தலைவரே வாசித்தார்.
பொருள் எண் 01:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 02:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 03:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 04:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 05:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 06:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 07:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 08:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 09:
ஆடறுக்குமிடத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வருவதாக 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தகவல் தெரிவித்தார்.
பொருள் எண் 10:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 11:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 12:
இவ்வகைக்கு ஏற்கனவே பழைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நிதியொதுக்கப்பட்டுள்ளதால், தற்போது இதனை நிறைவேற்றத் தேவையில்லை என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கருத்து தெரிவித்தார்.
பொருள் எண் 13:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 14:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 15:
நகராட்சியால் நிறுவப்படும் தகவல் பலகைகளை விஷமிகள் தீண்டாவண்ணம் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டுமானால், அந்தந்த வார்டுகளிலுள்ள பள்ளிவாசல்கள் அருகிலும், புறநகரில் சமுதாயக் கூடங்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் அருகிலும் நிறுவலாம் என பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
குடிநீர் அளவை அறிந்திட அமைக்கப்படும் மீட்டர் அறைக்குத் தேவையான மீட்டர் கருவியை நகராட்சியே நேரடியாக வாங்க வேண்டுமென்றும், ஒப்பந்தக்காரரிடம் மீட்டர் வாங்கத் தேவையில்லை என்றும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
பொருள் எண் 16:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 17:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 18:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 19:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 20:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 21:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 22:
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 23:
“நகர்மன்றத் தலைவர் பதவியேற்ற அன்று, நகராட்சியின் அனைத்து ஊழியர்களையும் நேரில் சந்திக்கச் சென்ற நாள் முதல் இன்று வரை, தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் நஸீர் என்பவர் தலைவரை மதிப்பதேயில்லை என்றும், நகர்மன்ற நடவடிக்கைகளில் தலைவர் இடும் உத்தரவுகளை அவர் செயல்படுத்துவதேயில்லை என்றும், இவ்வாறானவர்களைப் பணியில் வைத்துக்கொண்டு நகர்மன்றப் பணத்தை ஊதியம் என்ற பெயரில் வீணாக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், “பல விஷயங்களில் நகர்மன்றத் தலைவர் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பது ஒருபுறம் இருந்தபோதிலும், அதற்காக இதுபோன்ற - ஊழியர்களின் அவமரியாதையான நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வாய் மூடி இருக்க இயலாது” என்றும் தெரிவித்தார்.
பொருள் எண் 24:
(1) கடற்கரையின் நடுப்பகுதியில் இருப்பது போல வட-தென் புறங்களிலும் ஒளி வெள்ள விளக்கு அமைத்தல்...
(2) கடற்கரையின் வட-தென் புறங்களில் இரண்டு சிறு மண்டபங்கள் உள்ளன. திடீரென மழை பெய்கையில், ஒதுங்குவதற்காக பொதுமக்கள் இந்த மண்டபங்களையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதனைக் கருத்திற்கொண்டு, அந்த மண்டபத்தை சற்று விரிவாக்கிக் கட்டுதல்...
(3) கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக, தனி நடைபாதை அமைத்தல்...
(4) கடற்கரையில் இருக்கும் கழிப்பறைகளை புனர்நிர்மாணம் செய்தல்... பொதுமக்கள் தேவையைக் கருத்திற்கொண்டு கூடுதலாக கழிப்பறைகளைக் கட்டுதல்...
(5) காயல்பட்டினத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னமொன்றை நுழைவிடத்தில் அமைத்தல்...
(6) கடற்கரையில் கடைகளுக்கென தனியிடத்தை ஒதுக்கி, கடைகளை அமைத்துக்கொடுத்தல்...
(7) கடற்கரையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் துப்புரவு செய்திட நவீன கருவி வாங்கல்...
ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
கல் கட்டிடங்களிலேயே வாழ்க்கையை நடத்தி வரும் பொதுமக்கள் மன அமைதிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் கடற்கரை மணற்பரப்பை நாடியே வருவதாகவும், அந்த மணற்பரப்பை எக்காரணம் கொண்டும் புதிய கட்டிடங்கள் என்ற பெயரில் அழித்துவிடக் கூடாது என்றும், தற்போது கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களையும் அப்புறப்படுத்தி, கடற்கரை மணற்பரப்பை விரிவாக்கித் தர வேண்டும் என்றும், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
பொருள் எண் 25:
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், கடைகளை வைத்துள்ள குத்தகைதாரர்கள் மற்றும் அவர்களிடம் உள் வாடகை அடிப்படையில் கடை நடத்தி வரும் நபர்களை அழைத்து, 02.05.2012 அன்று நகர்மன்றக் கூட்டரங்கில் நடத்தப்பட்ட கூட்டத்தின் முழு விபரங்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்தில் தெரிவித்தார்.
நகர்மன்றக் கட்டளைப்படி ஒருவர் மட்டுமே வாடகையை உயர்த்தித் தர சம்மதித்ததாகவும், பிறரால் அவரும் தடுக்கப்பட்டார் என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நகர்மன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட இசையாத கடைக்காரர்கள் விஷயத்தில், அடுத்தடுத்த நடவடிக்கைகள் முறைப்படி எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள இரு சக்கர வாகன காப்பக குத்தகை குறித்து கூட்டத்தில் வினவப்பட்டது. அதற்கு விளக்கமளித்த நகராட்சி ஆணையர் அஷோக் குமார், ஏற்கனவே அதனை குத்தகைக்கு எடுத்தவர் தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதாகவும், நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பின்னர் அது பொது ஏலம் விடப்படும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத் துளிகள்...
3 தினங்களுக்கு முன்பே அஜெண்டாவைத் தாருங்கள்...
“நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருட்களடங்கிய அஜெண்டாவை கூட்டம் நடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பாகவேனும் அளிக்க வேண்டும்... அப்போதுதான் உறுப்பினர்கள் தகுந்த தயாரிப்புகளுடன் வர இயலும்...” என்று, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.
அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், இக்கருத்தை தான் வரவேற்பதாகவும், தனக்கே கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகத்தான் அஜெண்டா வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தலைவியம்மா வளைஞ்சி கொடுக்கனும்...
“நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறாதமைக்குக் காரணம், நகர்மன்றத் தலைவர் சிறிதும் வளைந்து கொடுக்காததுதான்... காரியம் நடக்க வேண்டுமெனில் சிறிது அனுசரித்துத்தான் நடக்க வேண்டும்” என்று 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
“அனுசரித்துக் கொடுப்பதென்றால் என்ன செய்ய வேண்டும் என உறுப்பினரே தெரிவிக்கலாம்” என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் தெளிவான விடையெதுவும் அளிக்கவில்லை.
இருப்பில் ஒன்று, நடப்பில் ஒன்றா...?
“நகர்மன்ற உறுப்பினர்கள் தமது வார்டு பணிகளுக்கென சம்பளம் எதுவும் பெறுவதில்லை... எனினும், மாதாந்திர கூட்டத்தில் வழங்கப்படும் சிறுதொகை, குறைந்தபட்சம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவாவது பயன்படுகிறது... அரசு ஆணைப்படி ரூ.600 வழங்கப்பட வேண்டும்... ஆனால் ரூ.500தான் வழங்கப்படுகிறது... இது ஏன்?” என 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கேள்வியெழுப்பினார்.
அதனை ஆதரித்து, 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
வெளிநடப்பு...
பொருள் எண் 17 வாசிக்கப்பட்டபோது, “நகராட்சி பொது நிதியிலிருந்து பல திட்டங்களுக்கு நிதியொதுக்கப்படும் அதே நேரத்தில், பொது நிதியில் உள்ள மொத்த இருப்புத் தொகை எவ்வளவு என பதவியேற்ற நாள் முதல் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கேட்டிருந்தும், இதுவரை அதுகுறித்து தகவல் தரப்படவில்லை... அதற்காக நான் வெளிநடப்பு செய்கிறேன்...” என்று கூறி, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூட்டத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார்.
திருமண விருந்தில் துப்புரவுப் பணி...
திருமண விசேஷங்களின்போது தெருக்களில் நடத்தப்படும் விருந்துகள் நிறைவுற்ற பின்னர், அங்கு சேரும் குப்பைகளை இதுகாலம் வரை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களே துப்புரவு செய்யும் வழமை உள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டில் துப்புரவுப் பணிக்குச் செல்ல முனைந்த பணியாளர்களை நகர்மன்றத் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்த 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.அபூபக்கர் அஜ்வாத், “உங்க இஷ்டத்துக்கு நீங்க தனியாக உத்தரவு போடக்கூடாது... நீங்க செய்த இந்த வேலையால் என் உறவினர் பாதிக்கப்பட்டுள்ளார்...” என்று கோபம் பொங்க தெரிவித்தார்.
அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், “நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளனர்... கடற்கரையில் தினமும் குப்பை தேங்குவதாக பொதுமக்கள் பலர் அனுதினமும் என்னிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றனர்... ஒரு திருமண வீட்டில் துப்புரவு செய்வதற்கு நகராட்சிப் பணியாளர்கள் செல்லாவிட்டாலும் அங்கு வேறு யாரையாவது வைத்து திருமண வீட்டாரால் வேலை வாங்கிக்கொள்ள இயலும்... ஆனால், கடற்கரையைத் துப்புரவு செய்ய வேண்டிய நேரத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், யாரைக் கொண்டு அந்த வேலையை வாங்குவது? எனவே, எது முக்கியமோ அதற்கே நான் முன்னுரிமையளித்தேன்” என்று தெரிவித்தார்.
நடுவீதியில் திருமணப் பந்தல்...
அதனையடுத்து கருத்து தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், “நகரில் வீதிகளில் கல்யாணப் பந்தல் அமைப்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை என்றாலும், தற்காலத்தில் மக்கள் நெருக்கம் அதிகளவில் உள்ளதால், சாலையை அவர்கள் பயன்படுத்துவதும் மிகவும் அதிகரித்துள்ளது.
முந்தைய காலங்களில் பள்ளிக்கூடங்களுக்கு இத்தனை வாகனங்கள் இல்லை... இன்று அவை அதிகம்...
முந்தைய காலங்களில் அதிகளவில் மருத்துவ தேவைகள் ஏற்படவில்லை... இன்று தினந்தோறும் அதற்காக பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர்...
இயற்கைச் சீற்றங்கள், தீ விபத்துகள் போன்ற எதிர்பாராத தருணங்களில் மீட்பு மற்றும் தீயணைப்பிற்காக வாகனங்களில் செல்வோரை இதுபோன்ற பந்தல்கள் தடுத்தால் அதனால் ஏற்படப் போகும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?
தற்காலத்தில் நகரின் எல்லாப் பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் விரிவாக்கி கட்டப்பட்டுள்ளது... எத்தனையோ பேர் பொது இடங்களில் தமது திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்கின்றனர்... எனவே, பொதுமக்கள்தான் இது விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும்... அவரவருக்கென்று வரும்போதுதான் உணர்வோம் என்று யாரும் இருந்து விடக்கூடாது...
கல்யாணப் பந்தல் விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் தனி சட்டத்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்... என்று தெரிவித்தார்.
புதிய பொறியாளர் நியமனத்திற்கு நன்றி...
காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய பொறியாளர் நியமிக்கப்டுவதற்கு நன்றி தெரிவிப்பதாக, 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு வராம இருந்துட்டீங்களே...?
நகரில் குடிநீர் வினியோகம் குறித்து சில உறுப்பினர்கள் விளக்கங்களைக் கோரினர். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர், “இன்று காலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) அதிகாரிகள் நகராட்சிக்கு வந்து - நகரில் குடிநீர் வினியோகம் குறித்து பல்வேறு ஆலோசனைகளைத் தந்தனர்... இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் - பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமலிருந்தது வருத்தமளிக்கிறது... இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 18 உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் எதிர்பார்த்தேன்... ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது... அவர்கள் அனைவரும் வந்திருந்தால், ஏராளமான அரிய விளக்கங்களைப் பெற்றிருக்கலாம்... தமது சந்தேகங்களுக்கும் தீர்வு பெற்றிருக்கலாம்...” என்று தெரிவித்தார்.
ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து, காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பம்பிங் மோட்டார், நகரின் 4 பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை மட்டும் கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நகரிலுள்ள அனைத்து தொட்டிகளுக்கும் முறையாக குடிநீரை பம்பிங் செய்தனுப்ப இந்த மோட்டார் போதாது என்றும், எனினும் இப்பிரச்சினையை தற்காலிகமாகத் தீர்த்திட, காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியருகில் ஒரு Sump தொட்டி அமைக்கப்பட வேண்டுமென்றும், காலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்த நகர்மன்றத் தலைவர், “அவ்வாறு Sump தொட்டியமைக்க அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களா...?” என்று கேட்க, உறுப்பினர்கள் ஒருமனதாக அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
எனக்கு இது தேவையா...?
நகரில், குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவது எல்லா இடங்களிலும் நடப்பதாகக் கூறப்பட்டாலும், எழுத்துப்பூர்வமாக தகவல் பெறப்பட்டால் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதைக் கருத்திற்கொண்டு, பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஓரிடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தான் சென்றதாகவும், இதனையறிந்த அப்பகுதி உறுப்பினர் தன்னை வாய்க்கு வந்தபடி பேசியதாகவும், எனது பொறுப்பிலிருந்து கொண்டு இதுபோன்ற சொற்களையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும், நகராட்சி ஆணையர் அஷோக் குமார் வருத்தத்துடன் தெரிவித்தார்.
அரசுக்கு நன்றி...
இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்குத் தேவைப்படும் இடத்தை அரசே அளிக்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வங்கி கணக்கறிக்கை
நகராட்சிக்கு பல வங்கிகளில் பணம் இருப்பு உள்ளபோதிலும் இதுவரை Bank Statement பெறப்படாத நிலையில், தற்போது இரண்டு வங்கிகளிலிருந்து அது பெறப்பட்டுள்ளதாகக் கூறி வங்கி கணக்கறிக்கையை நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் காண்பித்தார். ஆங்கிலத்திலிருந்த அந்த அறிக்கையை 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கூட்டத்தில் வாசித்து விளக்கமளித்தார்.
குடிநீரை காய்ச்சியே பருகுங்கள்!
நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் எப்போதும் காய்ச்சியே குடிக்குமாறு - நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென நகராட்சி ஆணையர் அஷோக் குமார் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தது. |