தமிழக அரசின் IUDM சிறப்பு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு என காயல்பட்டின நகராட்சிக்கு - 50 லட்ச ரூபாய் - கடந்த நவம்பர் மாதம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து - டிசம்பர் மாதம் 30 ம் தேதி - காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நடந்த மாதாந்திர சாதாரண கூட்டத்தில் - ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
அதன்படி கீழ்க்காணும் பொருட்கள் கொள்முதல் செய்ய - நகர்மன்றம் மூலம் - அனுமதியும் வழங்கப்பட்டது.
1. டம்பர் பிளேசர் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.8,50,000
2. டம்பர் பிளேசர் தொட்டி 45 எண்ணம் வாங்குதல் - ரூ.24,75,000 (ஓர் எண்ணம் – ரூ 55,000)
3. புஷ்காட் 48 எண்ணம் வாங்குதல் - ரூ.7,08,000 (ஓர் எண்ணம் – ரூ 14,750)
4. டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.9,67,000
மொத்தம் ரூ.50,00,000
முறையாக விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் - நகர்மன்றத் தலைவரின் உத்தரவின் பெயரில் - இரு முறை தள்ளிவைக்கப்பட்ட இது குறித்த டெண்டர் - இறுதியாக மே 23 அன்று நடைபெற்றது.
டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் அனுபவம் குறித்த பரிசீலனை (Technical Bid) முதலில் நடைபெற்றது. இதில் சில நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டு, எஞ்சிய நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகள் (Financial Bid) - சில தினங்களுக்கு பிறகு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இது குறித்த முடிவுகள் அதிகாரப்பூர்வமாக - இரு வாரங்கள் கழித்தும் - இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழகம் முழுவதும் செய்திதாள்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்ட இந்த டெண்டரில் - தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. பொதுவாக - நகராட்சி பொறியாளர்களால் தயாரிக்கப்படும் மதிப்பீட்டில் இருந்து - டெண்டரை வெல்லும் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி கூடியது 5 சதவீதத்திற்கு - கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்.
ஆனால் - தற்போது காயல்பட்டினம் நகராட்சியில் விடப்பட்ட மூன்று பொருட்களுக்கான டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் மிக குறைவான தொகை (L1)- மதிப்பீட்டை விட ஏறத்தாழ 25 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் - திறந்த முறையில், பல நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் (Competitive Bidding) இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதே - என தெரிகிறது. இதனால் நகராட்சி சுமார் 12 லட்சம் - மிச்சம் அடைந்துள்ளது.
நகராட்சி பொறியாளரால் ரூபாய் 55,000 என மதிப்பிடப்பட்ட Dumber Placer Bin - ஒரு நிறுவனத்தால் 42,000 ரூபாய்க்கும் குறைவாக வழங்க ஒப்பந்தபுள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய் மிச்சம்.
நகராட்சி பொறியாளரால் ரூபாய் 14,750 என மதிப்பிடப்பட்ட Push Cart - ஒரு நிறுவனத்தால் 10,000 ரூபாய்க்கும் குறைவாக வழங்க ஒப்பந்தபுள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் மிச்சம்.
நகராட்சி பொறியாளரால் ரூபாய் 8,50,000 என மதிப்பிடப்பட்ட Vehicle Body Building - ஒரு நிறுவனத்தால் 500,000 ரூபாய்க்கும் குறைவாக வழங்க ஒப்பந்தபுள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3.5 லட்சம் ரூபாய் மிச்சம்.
இருப்பினும் - டெண்டர் முடிந்து ஏறத்தாழ 2 வாரங்கள் ஆகியும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரை வெளியிடப்படவில்லை. இந்த கால தாமதம் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது. |