காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 28ஆம் அண்டு விழா மற்றும் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் விழா, 04.06.2012 திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் முஹ்யித்தின் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபு முஹம்மத் இப்றாஹீம் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஸ்.எச்.முத்துவாப்பா கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர், ஏழை மாணவர்களுக்கு சுன்னத் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி நடைபெற்றது.
மாலை அமர்விற்கு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ தலைமையேற்று, சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, “அண்ணலார் ஓர் அழகிய முன்மாதிரி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இரவு அமர்வு, முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது. ஹாஜி கே.டி.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.எம்.உஸைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் பி.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். எம்.எஸ்.கே.இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் மவ்லவீ எம்.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் - 4 மாணவர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.20,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
நிறைவாக, ஹாஜி எம்.எம்.மொகுதூமு் கண் ஸாஹிப் பரிசுகளை வழங்கினார். கே.பி.முஹம்மத் அப்துல் காதிர் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இவ்விழாவில், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
தோல்சாப்பு முஹம்மத் மூஸா நெய்னா.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ. |