கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, வழமை போல இவ்வாண்டும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, ஜூன் மாதம் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தவுள்ளது.
இம்முகாம் குறித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இம்முகாமில், பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசகள் தொடர்ந்து வழங்கப்பட்டு, புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காத்திட வழிகாட்டப்படவுள்ளது.
கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, வழமை போல இவ்வாண்டும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தவுள்ளது.
குறைந்த அளவிலேயே பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதால், முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
முன்பதிவு செய்ய விரும்புவோர்,
(1) மன்னர் ஜுவல்லர்ஸ்
(அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் எதிரில்)
ஸீ-கஸ்டம்ஸ் சாலை, காயல்பட்டினம்
அல்லது
(2) இக்ராஃ கல்விச் சங்கம்
(அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில்)
அலியார் தெரு, காயல்பட்டினம்
ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அங்கேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 02.06.2012. சனிக்கிழமை இரவு 07.00 மணி.
இம்முகாமில், பெண்களுக்கான கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி சலுகைக் கட்டணத்தில் போடப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் அதற்கும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருப்போர், தம் குடும்பத்தினரை இம்முகாமில் அவசியம் பங்கேற்கச் செய்து, உயிர்க்கொல்லி புற்றுநோயிலிருந்து இறையருளால் பாதுகாத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |