Re:இக்ராஃவின் புதிய தலைவரானா... posted byசட்னி,செய்யது மீரான் .. (ஜித்தா,சவுதி அரேபியா... )[07 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19204
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின்
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கு
மனப்பூர்வமான நல் வாழ்த்துக்கள்.
இந்த இனியதோர் நிகழ்வில் பெரும் திரளாக வந்து கலந்து
சிறப்பித்துள்ள பெருமக்களுக்கும்,இந்த அமைப்பின் ஆயுட்கால உறுப்பினராக ரூபாய் 15,000 செலுத்தி தங்களை இணைத்து கொண்டுள்ள தனவந்தகர்களுக்கும்,
மேலும் ரூபாய் 1,00,000 செலுத்தி புரவலர்களாக இணைந்திட உள்ள நல்லவர்களுக்கும் ,இதன்
அனைத்து நிர்வாகிகள்,செயற்குழு,பொதுக்குழு உறுப்பிணர்கள்,அனுசரனையாளர்கள்,
முன்னால், இந்நாள், வருங்கால(இன்ஷாஅல்லாஹ்)தலைவர்களுக்கும்,
அனைத்துலக நற்பணி மன்றங்களுக்கும்
மேலும் அனைவருக்கும் அகம் குளிர்ந்த பாராட்டுக்கள்.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் இரு உலகிலும் இதற்கான
நற்கூலியை பல மடங்கு தருவானாக ஆமீன்.
கல்வியை நாம் அனைவரும் கற்க வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் பிறருக்கு உதவும் கருணை உள்ளம் கொண்ட நல்ல இதயங்களையும் இணைத்தே உருவாக்கணும்.
மேலும் மருத்துவத்திற்கான பொது அமைப்பும்
அத்தோடு நடமாடும் மருத்துவமனையும்,
நல்ல மனம் கொண்ட மருத்துவர்களும் தேவை இது
இப்பொழுது காலத்தின் கட்டாயமாக நம் முன் உள்ளது..
வயதில் மூத்தவர்கள்,பலஹினமானவர்கள் மற்றும்
அவசர அவசிய மருத்துவ சிகிச்சை தேவைக்குரிய
நமது சொந்தங்களுக்கு அவர்களின் இல்லம் வந்து
கடந்த காலங்களில் மருத்துவம் செய்த மருத்துவ மாமனிதர்கள்
இன்றைய காயலில் இப்பொழுது யாரும் இல்லாதது
நம் கை சேதமே.
கண்ணியத்திற்குரிய என் காயல் சொந்தங்களே
கண்ணீர் மழையோடு இதை கண்விழித்து இதை நான் சொல்ல (எழுத)காரணம் எங்கள் கண்ணுக்கு கண்ணான
கல்பு எல்லாம் நிறைந்துள்ள அகவை 93 கண்ட
சேகு கம்மாவை (என் தாயின் தாய் அவர்கள் )
இதோ இன்று இரவு இழந்து நாங்கள் தவிக்கின்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
முதுமையின் காரணம்மாக மிக சுகவீனம் ஏற்பட்டு மிகுந்த வேதனை பட்டுள்ளார்கள்.
இவர்களுக்குரிய சிகிச்சை அளித்திட வேண்டி தற்பொழுது
ஊரில் மருத்துவ தொழில் செய்யும் ஆண்,பெண் மருத்துவர்களை அவர்களின் இருப்பிடம் சென்று
கடந்த மூன்று நாட்களாக காலில் விழாத குறையாக அழைத்தும்
கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை
மனம் இறங்கி வரவும் இல்லை.
சக மனிதனுக்கு இரக்கம் காட்டதாவருக்கு இறைவனும் இரக்கம் காட்ட மாட்டான் என்பதை பல முறை கேட்ட இவர்கள் நம்மவர்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.
இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக நம் காயலில்
நடைபெற்று வருவதும் இதனால் நிறைய நபர்கள் தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவித்து வருவதும் அறிகின்றோம்..
எங்களுக்கு என்று சொந்த மருத்துவமனை உள்ளது,
எங்கள் ஊரில் எண்ணில் அடங்காத மருத்துவர்கள் உருவாகி உள்ளார்கள் என்று வேண்டும் என்றால்
நாம் பெருமை பாராட்டி கொள்ளலாம் இவை எல்லாமே
தாகித்தவன் கையிலும் கண்ணிலும் பட்ட கானல் நீர்தான்.
இறுதியாக 108 அவசர சிகிச்சை பிரிவிற்கு தொடர்பு கொள்ள
அவர்கள் ஜாதி மதம் பாராது உடனடியாக வந்து
சிகிச்சை அளித்தார்கள் அந்த நல்ல உள்ளம் படைத்த நல்லவர்கள்.
இப்படியாக பொது மக்களுக்கு அவசர அவசிய உதவிக்கு ஏற்பாடு செய்துள்ள மத்திய மாநில அரசுக்கும் மருத்துவ சேவை செய்யும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டும்
இதன் வழியாக தெரிவிக்கின்றோம்.
என் போன்று சொந்தங்களை அங்கு விட்டு விட்டு பிரிந்து
கடல் கடந்து வந்து கொளுத்தும் வெயிலையும் பாராது பொருள் சேர்க்க வந்துள்ள
அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இது சிறு முயற்சி.
அன்பின் அட்மின் அவர்களே இதனை அப்படியே பிரசுரிக்குமாறு
மிகுந்த அன்புடன் வேண்டுகின்றேன்.
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
என்றும் அன்புடன்
சட்னி,செய்யது மீரான்.(பொதுகுழு உறுப்பினர் இக்ரா)
ஜித்தா,சவுதி அரேபியா.
`
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross