Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி... posted byS.K.Salih (Kayalpatnam)[09 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19223
ஆடு, மாடு தொட்டி ஏலம் - முந்தைய காலங்கள் போல் - மூடுமந்திரமாக விடப்படவில்லை. நகரில் அனைவரும் அறியும் வகையில் - துண்டுப் பிரசுரங்கள் - பல தினங்களுக்கு முன்னர் - பல வழிகளில் விநியோகிக்கப்பட்டே (ஜும்மாக்களில், பத்திரிக்கை, இணையதளம்) இந்த ஏலம் நடத்தப்பட்டது.
“எனக்கு ஏலம் விட்டது தெரியாதே...? தெரிந்திருந்தால் நானும் பங்கிற்றிருப்பேனே...??” என யாரும் கூற இயலாது. -இது முதலாவது அம்சம்.
இந்த ஏலத்தில் பங்கேற்ற நால்வரில் - அதிக தொகையை வழங்க முன்வந்த எஸ்.விஜயன் ஏலத்தை எடுத்தார். இந்த ஏலம் மூலம் ஆட்டுக்கு 5 ரூபாய் என்றும், மாட்டுக்கு 6 ரூபாய் என்றும் போக, மண்ணீரல் (பல்குத்தி)யும் கிடைக்கும் என்றும் அவர் நினைத்திருந்தார். அவர் மட்டுமல்ல! அந்த ஏலத்தில் பங்கேற்ற மீதி மூன்று பேர்களும்தான்!!
ஆகவே இந்த ஏலத்தை எடுத்தால் என்ன கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று கூறவும் இயலாது. -இது இரண்டாவது அம்சம்.
ஏலம் விடும்போது - விதிகளையும் போட்டிருக்கவேண்டும் என்று கருத்து கூறப்படுகிறது. நூற்றாண்டு கண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் எந்தக் காலத்திலும் - நகராட்சி நேரடியாக - ஆட்டுக்கு இவ்வளவு, மாட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்தது இல்லை. முந்தைய நகர்மன்றமும் - இந்த விஷயத்தில் தலையிடவில்லை. கட்டணம் என்பது - குத்தகை எடுத்தவருக்கும், வணிகர்களுக்கும் உள்ள முடிவாகவே இருந்து வந்தது. -இது மூன்றாவது அம்சம்.
காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன்னர் 2007/08இல்தான் இது குறித்த ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் எடுத்த நபர் - ஆண்டுக்கு 180,000 என்ற தொகைக்கு எடுத்திருந்தார். எடுத்த நபர் தொகையை சரியாக செலுத்தாதால் - தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆடு-மாடு அறுப்புத் தொட்டி - நகராட்சியால் ஏலம் விடப்படவில்லை. அவ்வாறு கட்டணத்தை செலுத்தத் தவறியவர் மீதும் முந்தைய நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நகராட்சிக்கு நஷ்டமே.
அறுப்புக் கட்டணத்தை, கடை உரிமையாளர்கள் நேரடியாக நகராட்சியிடமே கட்டி வந்துள்ளனர். அதன் மூலம் பெறப்பட்ட தொகை மிகவும் சொற்பம்.. இந்தப் பின்னணியால்தான் புதிய நகர்மன்றம் - அறுப்பு தொட்டிக்கான ஏலத்தை தற்போது விட்டுள்ளது. -இது நான்காவது அம்சம்.
ஏலத்தை எடுத்தவர் - தனக்கு வழமை போல் பல்குத்தி, முடியாவிட்டால் கிடா ஒன்றுக்கு 50 ரூபாய் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் - கூடுதலாக ஒரு ரூபாய் மட்டும்தான் தரமுடியம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நகராட்சி தலையிடாமல் - குத்தகைதாராரும், உரிமையாளர்களும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டிருக்கலாம். இதுதான் தமிழகத்தில் பல நகராட்சிகளில் நடக்கிறது (உதாரணம் - கீழக்கரை).
ஆனால் - ஏலத்தை எடுத்தவர் முஸ்லிமல்லாதவர் என்பதால் - பிரச்சனை - விஷமிகளால் திசை திருப்பபடக் கூடும் என்ற காரணத்திற்காகத்தான் நகர்மன்றம் தலையிட்டு - இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளது.
ஏழு மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தை - மறுநாளும் தொடர்ந்தது. அதன் இறுதியில் - ஏலம் எடுத்தவர் - தனது உரிமத்தை ரத்து செய்ய சம்மதம் கூறியுள்ளார். அவ்வாறு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் விடப்படும் ஏலத்தில் - இறைச்சிக் கடை உரிமையாளர்கள், தாங்களே பங்கேற்பதாக இதற்கு ஒரு நாள் முன்னரே வாக்களித்துள்ளனர்.
இதற்கு மாற்றுத் தீர்வாக, குத்தகைதாரர் நிர்ணயிக்கும் தொகைத்தான் இறைச்சிக்கடை வணிகர்கள் அனைவரும் கட்ட வேண்டும் என விட்டிருக்கலாம். கடைக்காரர்கள் சம்மதம் இல்லாமல், இதனால் பிரச்சனை பெரிதாகத்தான் வளர்ந்திருக்கும்.
அல்லது நகர்மன்றமே தலையிட்டு ஒரு தொகையை நிர்ணைத்திருக்கலாம். ஆனால் அத்தொகையை, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தீர்வு கிட்டியிருக்காது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதில், நகர்மன்றத் தலைமையின் அனுபவின்மையைக் காண்பிக்கிறது என்று ஒரு சிலர் கூறியுள்ளனர். சிக்கலான ஒரு சூழ்நிலையிலும் - திறம்பட நகர்மன்றம் செயல்புரிந்ததையே காண முடிந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross