கவனத்தோடு வீறுநடைபோடுங்கள். posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[10 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19247
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழிக்கேற்ப தீர விசாரத்ததில் திரட்டிய தெளிவான உண்மையின் சாராம்சம்.
"தப்பு" நடக்கவில்லை ஆனால் தவறு நடந்திருக்கிறது."குறைகள்" நடக்கவில்லை ஆனால் கவனக்குறைவான சம்பவத்தால் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தவறுகள் திருத்தப்படலாம்,குறைகள் களையப்படலாம்.
ஒரு பெரிய நிர்வாகத்தில் இது ஒரு பின்னடைவுதான்.அதை நாம் ஒப்புகொள்ளதான் வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் இன்னும், இன்னும் கவனமாகவே இருக்கவேண்டும் மாநகராட்சி நிர்வாகமும் அதன் தலைமையும்.
மேற்கண்ட நிர்வாக சறுக்கலை சாக்காக வைத்துகொண்டு சகட்டுமேனிக்கு சாடுவதுதென்பது ஒரு நிர்வாகத்திற்கு நாம் சொல்லும் யோசனை உதவியாக இருக்கமுடியாது .
எப்படா இடறுவார் ஏறி மிதிக்கலாம் என்ற இழிவான சிந்தனையை தவிர வேறு ஒன்றும் இல்லை.
கால்கள் பின்னினாலும் கவனத்தோடு சீரிய, நேரிய பாதையில் வீறுநடை போடுங்கள். வழி வெளிச்சத்தை எங்களால் இயன்ற வரைக்கும் உங்களுக்கு கட்டுவோம் தலைவி அவர்களே!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross