Re:பேருந்து ஓட்டுநர்களுக்கு ... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[11 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19262
இது ஒன்றும் புதிய விஷயமல்ல. பழைய கதைதான். இதற்காக வண்டியில் ஏறிய பிறகு சண்டை பிடித்து நடுவழியில் இறக்கிவிட்ட பயணிகளின் கதைகள் ஏராளம் உள்ளன. ஓட்டுனர்கள் தங்களின் பணியை சுலபமாக செய்வதற்கு இந்த உத்தியை கையாள்கின்றனர்.
அது ஏன்.. திருசெந்தூரில் இருந்து நமதூர் வழியாக மதுரை செல்லும் பேருந்துகளில் கூட "காயல்பட்டினம் போகாது" என்று சொல்லிக்கொண்டே பயணிகளை ஏற்றிக்கொண்டு காயல்பட்டினம் வழியாகவே செல்லும் கொடுமையும் நடைபெறுகிறது..
ஓட்டுனர்கள் நீண்ட தூரபயணிகளை ஏற்றி சென்றால்தான் தங்களுக்கு அரசு வழங்கும் கமிஷன் அடிப்படையில் வருமானம் பெருகும் என்கிற நிலைப்பாட்டிலேயே இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.
இதை உடனடியாக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross