Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[11 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19264
தம்பி எஸ்.கே சாலிஹின் கருத்து சரியானது. நான் கேள்விப்பட்ட வரையில் பல்குத்தி எனபது கிடாய் அறுக்கும் லெப்பைக்கே சொந்தம் என்பதும் ,லெப்பைக்கு அதற்க்கு பகரமாக பணம் கொடுத்து விட்டு வியாபாரிகள் அதை வாங்கி வந்து விற்பனை செய்தார்கள் என்பதும்தான் உண்மை. சென்ற முறை டிப்போ ஏலம் எடுத்தவர் இந்த பல்குத்தி விவகாரத்தை கண்டு கொள்ளாததால் பல்குத்தியை வியாபாரிகள் வாங்கிவந்து விற்பனை செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
எனினும் விட்ட ஏலத்தை ரத்து செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இதை தவிர்த்திருக்கலாம்.
சகோதரி ஆபிதா அவர்கள் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் இதில் செயலாற்றினார். "அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் "என்ற மனப்பான்மையில் இருக்கும் சில சகோதரர்கள் உடனேயே தங்களது சாட்டையை சொடுக்கியுள்ளனர். முன்பு இருந்த எந்த தலைவர்களை காட்டிலும் சகோதரி ஆபிதா சிறப்பாகவே செயல்படுகிறார்.
சரி..ஆட்டுத்தொட்டி எந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது..?அதை முதலில் சொல்லுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross