Re:கற்புடையார் பள்ளி வட்டம் ... posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[11 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19270
உலக நெருப்பும், நரக நெருப்பும்
===============================
3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
Volume :3 Book :59
13:35 مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوا ۖ وَّعُقْبَى الْكَافِرِينَ النَّارُ
13:35. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
21:69 قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
47:12 إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ
47:12. நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
யா அல்லாஹ் இந்த மதிரியான உலகநெருப்பை விட்டும், இன்னும் நரக நெருப்பை விட்டும் உலக மக்கள் அனை வரையும் காப்பாற்றுவாயாக
மேலும், இந்த குற்ஆன் ஹதீதுகளை தொகுத்து கமண்ஸ் எழுதியவர்க்கும், உலகறிய எடிட் செய்த மொடரேட்டர் களுக்கும் முன் பின் செய்த பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை அறுள்யாக் ஆமீன்.
============================================
ஸயன்ஸ் கண்க்குப்படி உலக நெருப்பின் வெப்பநிலை 1500 ஃபாரன் ஹீட் டிக்ரி என்றும் சூரிய வெப்பநிலை .அறுபது ஆயிரம் ஃபாரன் ஹீட் டிக்ரி என்றும் கூறக்க் கேள்விப்பட்டிருக்கிறேன். . ஆனால் இந்த அளவுகள் படி நரக நெருப்பின் அளவு ஒரு லட்சத்தி ஐஆயிரம் ஃபாரன் ஹீட் டிக்ரி என்று விளங்குகிறது. வல்லாஹு அஃலம். உண்மையென்று நம்பினால் உலகில் நாம் எவ்வாரு நரக நெருஇன் பாதுகாப்புடன் நடக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross