கொடைகுணமுள்ள புண்ணிய கண்களின் பார்வை தஃவா சென்டர் பக்கம் சீராக விழ வேண்டு ... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[12 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19288
ஒரு வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கை நெறி, உண்மைநிலை, மதிப்பு, மரியாதை நேர்மை மற்றும் நீதியான நடத்தை சம்பவங்களடங்கிய அனைத்து அம்சங்கங்களையும் அந்த வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சொல்வதை விட,
வெளியில் உள்ளவர்கள் அந்த வீட்டின் மகிமையை பற்றி சொல்வார்களேயானால், அக்குடும்பத்தின் கண்ணியம் கரைகள் இல்லாத காற்றாற்று வெள்ளம் போல் வியாபித்துருக்கும்!
இந்த உண்மையை அறிந்து அந்த வீட்டிற்குள் சென்று அக்குடும்பதிலுள்ளவர்களுடன் ஒரிங்கிணைந்து அவர்களில் ஒருவராய் வாழத்துடிக்கும் ஏக்கமுடைய இததுடிப்புகளை, உண்மையான உணர்சிகளை வார்த்தைகளால் கொட்டியதை :தஃவா சென்டர் ஆண்டுவிழா அற்புத காட்சியில் கண்டு அசந்துவிட்டேன்! அல் ஹம்துலில்லாஹ் !
ஆமாம், இஸ்லாம் என்ற நம் குடும்பத்தோடு இணய துடித்து எல்லையில்லா ஆவலுடனும் ,இதய சுத்தியுடனும், எவருடைய தூண்டுதலுக்கும் துணை போகாமல் சுதந்திரமாக தூய இஸ்லாத்தை தெரிந்து, அறிந்து அதனுள் நம்மை இணைத்துகொள்வோம் என்ற மார்க்க வேட்கையில் எந்த வேதனைக்கும், சோதனைக்கும் ஏன் உயிர் தியாகத்திற்கும் கூட தயாராகி தன்னுடைய நிலையான முடிவில் எள் முனையளவும் பிசகாது நம் புனித மார்க்கத்தை தழுவிய அந்த அன்பு சகோதர, சகோதிரிகளின் உண்மையான விசுவாச வார்த்தைகளை கேட்க்கும் வாய்ப்பை பெற்ற அவ்வைபவத்தில் கலந்து கொண்ட அனைவர்களையும் கண்ணீர் காட்சிகளாக்கி விட்டார்கள் அந்த இளம் நெஞ்சங்கள் !
ஒய்யார கூத்தில்லாமல், ஓசையில்லா உன்னத தன்னலமற்ற சேவையால் நம் சமுதாயத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் முயற்சியில் தங்களை முழுவதுமாக அற்பணித்து பாமரத்தனமானவர்களையும், இப்புண்ணிய மார்க்கதில் புக துடிப்பவர்களையும் அல்லாஹுக்குகந்த அருமையான பாதையில் அழைத்து செல்ல துடிக்கும் அன்புள்ளங்கள் அடங்கிய அமைப்புதான் நமதூர் :தஃவா சென்டர்!
கம்பீரதோற்ற அழகும், அமைதியுமாக அலியார் தெருவில் அமைந்துள்ள அமைப்பு. இஸ்லாத்தை எழுச்சியூட்டும் காரியங்கள் எதனை எத்தனைதான் செய்து கொண்டிருக்கிறது. புண்ணிய சேவையின் பட்டியலை வாசிக்கும்பொழுது புல்லரிக்கறது நம் உள்ளமெல்லாம்!
நம்முடைய புனித மார்க்கத்தின் மகிமையை பிறவி முஸ்லிம்களாகிய நம்மில் பலருக்கு இன்னும் புரிந்து கொள்ள முடியாத நிலையில், பிற மதத்தில் இருந்து வந்த சகோதர சகோதிரிகள் நமக்கு பல மார்க்க உண்மைகளை உள்ளம் உருகும் நிலையில் எடுத்து கூற வைத்து, அவர்களின் தனித்திறமையை இவ் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் தூய தளம்தான் தஃவா சென்டர் என்றால் அது மிகையல்ல! .
இப்புண்ணிய பணி செய்யும் அந்த அமைப்பு இன்னும் எத்தனை எத்தனையோ புண்ணிய பயணம் செல்ல தயாராக இருந்தாலும் பொருளாதாரம் என்ற முட்டுகட்டைகளும், முட்புதர்களும் பயணத்தை முடக்கிபோட முயற்சிக்கிறது. அதை முறியடிக்க தாராள மனமுடைய முஃமீன்களாகிய நம்மில் தகுதியானவர்கள் முன்வந்து உதவி செய்து, அல்லாஹ்வின் அன்புக்குறியவர்களாக ஆவோமாக ஆமீன்!
ஒவ்வருவரும் அவர்களால் இயன்ற உதவியை எந்த கோணத்திலாவது செய்ய வேண்டுகிறேன். என்னால் இயன்றதை தஃவா சென்டர்க்கு செய்த சம்பவம்
1 நெல்லையை அடுத்துள்ள குக்கிராமதிற்க்கு காலையில் இருந்து மாலைவரை அல்லாஹ்வின் அழைப்பு பணிக்கு சென்று அப்பணியில் ஈடுபட்டேன்!.
2 :தஃவா சென்டரின் பல ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு என்னுடைய சிறய ஆலோசனைகளை கூறியதோடு, சில கூட்ட ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய வாய்பைபெற்றவன்.
3 தஃவா சென்டர்க்கு வேன் வாங்க வேண்டும் என்ற வசூல் குறுஞ்செய்தி என் அலைபேசிக்கு வந்தது ஒரு பங்கு 10,௦௦௦ என்றும் மொத்தம் 11 லட்சம் என்றும் சொல்லப்பட்டது.அக்குறுஞ்செய்தியை பலருக்கும் அனுப்பினேன், அப்படி அனுப்பிய அன்பு சகோதரர்களில் ஒருவரும், ஆபரன தங்ககடை அதிர்பரான சகோதரர் அளித்த பதில் செய்தியானது, இப்புண்ணிய காரியத்திற்கு என்னுடைய பங்கை அளிக்க விரும்புகிறேன் என்ற உதவிகரத்தை நீட்டினார்.. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதற்குள் அனைத்து பங்கும் பூர்த்தியாகிவிட்டது.
இதுபோல் எந்த நல்ல காரியங்கள் எத்தரப்பில் எத்திசையில் நடந்தாலும் அத்திசை நோக்கி கொடைகுணமுள்ள கருணைகண்கள் கூர்மையாக நோக்கியவண்ணமாகத்தான் இருக்கிறது. அப்புண்ணிய கண்களின் பார்வை தஃவா சென்டர் பக்கமும் சற்று சீராக விழ வேண்டும் என்று
வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross