Re:வளைந்து கொடுக்கனும்னா இப்... posted byHameed Rifai (Yanbu (KSA))[14 June 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19324
பதவியேற்பு விழாவில், பிஸ்மி சொல்லி ஆரம்பித்தார்களாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் சொன்னார்களாம்.
“கடவுளை முன்னிறுத்தி” என்ற பதவியேற்பு வாசகத்தைக் கூட, “அல்லாஹ்வை முன்னிறுத்தி” என்றெல்லாம் சொன்னார்களாம்.
இதையெல்லாம் இதே காயல்பட்டணம்.காம் தான் புல்லரிக்கச் செய்யும் வார்த்தைகளால் செய்தியாகத் தந்தது. அப்போது நாங்கள் நினைத்தோம், ஆகா, நம்ம நகராட்சிக்கு நல்ல காலம் பொறந்திடுச்சின்னு!
அந்த ஸலாமும், பிஸ்மியும், “அல்லாஹ்வை முன்னிறுத்தி”யும் லட்சங்களைக் கணக்குப் போட்டு லட்சியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் என்பதை அறியும்போது இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும், இவர்களுக்குத் துணை நிற்பவர்களையும், இயக்குபவர்களையும் பெரியவர்கள் - மனித நேயர்கள் என்று கருதியதற்கும் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும். (அட்மின் அவர்களின் கத்தரியைக் கருத்தில் கொண்டே நான் அடக்கி வாசிக்கிறேன்.)
“யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் தலைவி”. இது பெரும்பாலான உறுப்பினர் புண்ணியவான்கள் ஓயாமல் செய்யும் ஒப்பாரி.
தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும், சந்திக்கும் ஒவ்வொரு அதிகாரி குறித்தும், நடத்தும் ஒவ்வொரு கூட்டம் குறித்தும் அனைத்து உறுப்பினர்களின் மொபைல் ஃபோனுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி - இதற்கு முன்னிருந்த எந்தத் தலைவரும் செய்யாத (யாரையும் குறை சொல்வதற்காக நான் சொல்லவில்லை) வழிமுறைகளையெல்லாம் கையாண்டுள்ளார் தலைவி அவர்கள் என்றுதான் நாங்கள் கேட்டறிந்துள்ளோம்.
அழைத்த அழைப்பிற்கு பதிலும் அளிக்காமல், தான் செய்ய வேண்டிய பணிகளையும் செய்யாமல், தனித்தனியே ரகசிய கூட்டம் போடும் - ஊரைக்காக்க வந்த உத்தமர்களே...! நீங்கள்
உங்கள் கூட்டத்தில் நகரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க என்ன பேசினீர்கள்?
தெரு விளக்கு பராமரிப்பை சரிசெய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள்??
குப்பைகளை அகற்ற என்ன முயற்சி எடுத்தீர்கள்???
இந்த ஊரின் மனித வளத்தை பயனுள்ள வகையில் அமைத்திட நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
“நாங்கள்லாம் கவுன்சிலர்கள்தான், தலைவிதான் செய்ய வேண்டும்” என்று அப்போது மட்டும் வாய் கிழிய கூறும் நீங்கள், இதற்கெல்லாம் இந்தத் தலைவி முயற்சி எடுத்தபோது ஊர் நலனுக்காக ஒத்துழைக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை????
எடுத்ததற்கெல்லாம் “மனிதநேயர்”களிடமிருந்து உத்தரவை எதிர்பார்க்கும் கவுன்சிலர் கனவான்களே! ஊர் மக்களின் உத்தரவை மதிக்கப்போவது எப்போ?
தொழிற்சாலையில் போய் மதிய உணவு அருந்திவிட்டு வரவே உங்களுக்கு நேரம் போதவில்லையே? பின்னே மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது!
அட்மின் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்: வழமைபோல இதையும் கத்தரி வைத்து விடாதீர்கள்! நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. ஓட்டுப்போட்டதன் மூலம் என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டவனாக மாறிவிடக் கூடாதே என்ற மன விரக்தியில்தான் இதனை எழுதியுள்ளேன்.
என்னைப் போல எத்தனை பேர் உள்ளனரோ அல்லாஹ் அறிவான்.
ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். நாங்கள் இருப்பதுதான் வெளிநாட்டிலேயே தவிர, பிறந்த மண்ணின் தினசரி நடவடிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்துகொள்ளத் தவறுவதில்லை.
எனவே, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதையும், ஒத்துழைக்காமலேயே குறை சொல்வதையும் இனியும் சிலர் வழமையாகக் கொள்வார்களானால், அதை இந்தத் தளம் அவர்களின் கருத்துச் சுதந்திரம் என்று வெளியிடுமானால், ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன? அவற்றை நிறைவேற்றாத நிலை என அனைத்தையும் ஆதாரத்துடன் பட்டியலிட தயாராக உள்ளேன். தயவுசெய்து அதற்கு இடமளிக்க வேண்டும் என உங்களை அன்போடு வேண்டுகிறேன்.
மக்கள் நலனுக்காக இதனைச் செய்வீர்கள் என்று நம்பி காத்திருக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross