குறைந்தபட்ச நாணயம் வேண்டும்! posted bykavimagan kader (qatar)[17 June 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19394
சகோதரர் சுலைமான் அவர்களே!
எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எழுதுகின்றீர்கள் என்ற எனது
குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக, நகர் மன்றத் தேர்தலில், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்ததாக ஒரு பச்சைப் பொய்யை எழுதியுள்ள நீங்கள், அதனை நிரூபித்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். தவறினால், இந்த தளத்தின் மூலம் வருத்தம் தெரிவிக்கும் குறைந்த பட்ச நாணயமாவது
உங்களிடம் உண்டா என்பதனை உங்கள் பதில் மூலம் கூறவேண்டும்.
சுனாமி குடியிருப்பு பிரச்சனையில் துரோகம், பேரவையால்
தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் துணைத்தலைவரின் செக் மோசடி, இல்லாத கட்டிடத்திற்கு வாடகை, வேலையே செய்யாத பலருக்கு சம்பளம், நகராட்சியின் பணத்தை வட்டிக்கு விட்டது, இன்றைய துணைத் தலைவர் தேர்தலில்
லட்சக்கணக்கில் பணம் கைமாறிய மனிதநேயம், ஆண்டுக்கு
நான்குமுறை கூட நகராட்சிக்கு வராத நல்ல தலைவர்கள்,
ஊடகங்களும் அறிந்து கொள்ள முடியாத பலவித ஊழல்கள்
என்று மெகா ஆதாரத்துடன் நிரூபித்த பல்வேறு குற்ற்ச்சட்டுகளின் அணிவகுப்பினைக் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடியிருந்த நீங்கள்,எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இலாத ஒரு தலைவரை அப்பட்டமாக விமர்சிப்பது,உங்களது காழ்ப்புணர்ச்சியே அல்லாது வேறென்ன?
சென்னையில் துவங்கி உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு
கும்பல்,தங்களது பண பலத்தாலும்,அரசியல் செல்வாக்காலும்
நகரமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நினைப்பது இறைவன் மீது ஆணையாக உங்களுக்குத் தெரியாதா?
நகர்மன்றத் தலைவராக ஆசைப்பட்டு பின்னர் அது நடக்காது
என்று தெரிந்ததும் இயக்கம் கண்டு,குறிப்பிட்ட வேட்பாளரை
ஆதரித்து ஆதாயமும் அடைந்து,ஆறு மாதம் கழித்து அவதூறுக் கட்டுரை எழுதுவது நாங்களா?
நேர்மையோடும்,நெஞ்சுரத்தோடும் நீதிக்காகப் போராடும்
ஒரு தலைவரை,செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்ற
பாசிசக் கும்பலை இறைவன் அடையாளம் காட்டி,தவறு
செய்தவர்களை தலை குனிய வைக்கின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை.
உங்களது அணைத்து அபாண்டங்களுக்கும் பதில் கூற
காத்திருக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross